Show all

நடுவண் அரசு முடிவாம்! கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு அசிங்கப்படுத்த

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளை நடுவண் அரசு எடுத்து வருகிறதாம். அதன் தொடர்ச்சியாக, வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் புகைப் படங்களையும், இதர விவரங்களையும் செய்தி இதழ்களில் வெளியிட்டு அசிங்கப்படுத்துமாறு அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் நடுவண் நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வங்கியின் இயக்குனர்கள் குழு ஒப்புதலுடன் இதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு வங்கிகளுக்கு எழுதிய கடிதத்தில் நடுவண் நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் இருந்தும், செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டி விட்டதாகவும், இதில் சம்பந்தப்பட்ட தொகை ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 50 கோடி என்றும் நடுவண் நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

நிரவ் மோடி உள்ளிட்ட வைர வியாபாரிகள் இந்தப் பட்டியலில் வருகிறார்களா என்று தெளிவு படுத்தப்பட வில்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,726.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.