Show all

திராவிட இயக்கங்கள்? வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது! அண்ணாவின் முழக்கத்தை தூசு தட்டும் சந்திரபாபு

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பீகார் மீது உள்ள அன்பு, பரிவு ஆந்திரா மீது ஏற்படவில்லை. தென்மாநிலங்களில் வரிகளை பெற்று, வடமாநிலங்களுக்கு நடுவண் அரசு செலவு செய்கிறது என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவையில் குற்றம்சாட்டி உள்ளார். ஆந்திர மாநில சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு  பேசியதாவது: ஆந்திர மாநிலத்துக்கு சிறப்புத் தகுதிக்கு இணையான நிதியை சிறப்பு திட்டத்தின் கீழ் வழங்குவதாக நடுவண் அரசு இதுவரை கூறி வந்தது. ஆனால் ஆந்திராவுக்கு சிறப்புத் தகுதியும் வழங்கவில்லை. சிறப்பு நிதியும் வழங்கவில்லை. சிறப்புத் தகுதி உள்ள 8 மாநிலங்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளில், ரூ.3,847 கோடி மானியம் வழங்கியதாக கணக்குகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகாருக்கு சிறப்புத் தகுதி வழங்காவிட்டாலும் ராஷ்டிரிய சாம் விகாஸ்யோஜனா திட்டத்தில் பின்தங்கிய மாநிலமாக அறிவித்து மானிய தொகை திரும்ப வழங்கும் வகையில் ரூ.1000 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், மாவோயிஸ்ட்கள் அதிகளவில் இருக்கக்கூடிய பகுதிகளின் வளர்ச்சிக்காக ரூ.1000 கோடி மானியம் வழங்கப்பட்டது. பீகார் மீது உள்ள அன்பு, பரிவு ஏன் ஆந்திரா மீது ஏற்படவில்லை. நடுவண் அரசு தென்மாநிலங்களில் அதிகளவில் வரியை பெற்றுக்கொண்டு வடமாநிலங்களுக்கு செலவு செய்கிறது. ஆந்திராவுக்கு சிறப்புத் தகுதி வழங்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும். இந்த விவகாரத்தில் எந்தவொரு விசயத்துக்காகவும் நாங்கள் பின்வாங்க மாட்டோம். சிறப்புத் தகுதி ஆந்திராவுக்கான உரிமை. இதை எந்தகாலத்துக்கும் விட்டுக்கொடுக்கமாட்டோம். இவ்வாறு பேசினார். இதையடுத்து மாநில பிரிவினைக்கான சட்டத்தை அமல்படுத்தாத நடுவண் அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

எல்லாம் சரி! வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவுக்கு விடை கொடுக்கப் போராடினாலே போதும் என்கிற விசத்தை தெரிந்து கொள்ளாமல், பாஜகவிற்கு எதிராகச் செய்கிற அனைத்து முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீரே.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,726.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.