Show all

சிறந்த நிர்வாகத்தில் தமிழகம் முதலிடம்! அங்கீகரிக்கும் இந்தியா

இந்திய அரசு வெளியிட்டுள்ள, நாட்டிலேயே மிகச் சிறந்த நிர்வாகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில், தமிழகத்திற்கு முதலிடம். தொன் மக்கள், தொன் மொழிக்குச் சொந்தக்காரர்கள், தொல்பொருட்கள் அதிகம் கிடைக்கும் மாநிலம் என்றெல்லாம் தமிழகத்தை முன்னெடுத்தல்தானே தமிழகத்திற்கு உண்மையான பெருமையாக இருக்க முடியும். 

12,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய நல்லாட்சி நாள் மார்கழி பத்தாம் நாளில் (25,திசம்பர்) ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை, ‘இந்திய ஆட்சியை முன்னெடுப்பதில், சிறந்த நிருவாகம்’ நடைபெறும் மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள், உழவு, தொழில் ஆகியன அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியல், மிகப் பெரிய மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் மலைப் பகுதிகள், ஒன்றிப் பகுதிகள் என, மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும், தனித்தனியாக மதிப்பீடுகள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளில், மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்தும் பட்டியலிடப் பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக, சிறந்த நிர்வாகம் அளிக்கும், மிகப்பெரிய மாநிலங்களுக்கான பட்டியலில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது; மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன் சத்தீஸ்கர், நான்காவது இடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடங்களில், ஆந்திரா, குஜராத், ஹரியானா, கேரளா உள்ளன் மத்திய பிரதேசம், 10வது இடத்தில் உள்ளது. தெலுங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா, பீகார், கோவா, உத்தர பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட், அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.

வடகிழக்கு மற்றும் மலை பிரதேசங்களில், ஹிமாச்சல பிரதேசம், முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடங்களில், உத்தரகண்ட், திரிபுரா, மிசோரம், சிக்கிம், அசாம், ஜம்மு - காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் உள்ளன. மிகச் சிறந்த நிர்வாகம் அளிக்கும், ஒன்றியப் பகுதிகள் பட்டியலில், தமிழ் ஒன்றியப் பகுதியான புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. சண்டிகர், டில்லி, டாமன் மற்றும் டையூ, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, லட்சத்தீவுகள், அதற்கடுத்த இடங்களில் உள்ளன.

பல்வேறு துறைகளில், ஒவ்வொரு மாநிலத்தின் செயல்பாடுகள் குறித்தும் பட்டியலிடப் பட்டுள்ளது. அறங்கூற்று நிர்வாகம் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரிவில், தமிழகத்துக்கு, முதலிடம் கிடைத்துள்ளது. கேரளா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், அதற்கடுத்த நிலைகளில் உள்ளன. 

பொது கட்டமைப்பு வசதிகளிலும், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதில், குஜராத், பஞ்சாப், அதற்கடுத்த இடங்களில் உள்ளன.வடகிழக்கு மாநிலங்களில், ஹிமாச்சல பிரதேசம்; ஒன்றியப்பகுதிகளில், சண்டிகர் முதலிடத்தில் உள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில், மேற்கு வங்கம், முதலிடத்திலும், கேரளா, தமிழகம், அதற்கடுத்த இடங்களையும் பிடித்துள்ளன. வடகிழக்கு மாநிலங்களில், ஹிமாசலப் பிரதேசம்; ஒன்றியப் பகுதிகளில், புதுச்சேரி முதலிடத்தில் உள்ளன. வடகிழக்கு மற்றும் மலை பிரதேச மாநிலங்களில், ஜம்மு - காஷ்மீர்; ஒன்றியப்பகுதிகளில் சண்டிகர், முதலிடத்தைப் பிடித்தன.

வர்த்தகம் மற்றும் தொழில் துறையில், ஜார்க்கண்ட், முதலிடம் பிடித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில், உத்தரகண்ட்; ஒன்றியப் பகுதிகளில், டில்லி முதலிடத்தைபிடித்துள்ளன.

மனிதவள மேம்பாட்டில், கோவா முதலிடம் பிடித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில், ஹிமாச்சல பிரதேசம், ஒன்றியப்பகுதிகளில், புதுச்சேரி முதலிடத்தில் உள்ளன.

மருத்துவ வசதியில், கேரளா, முதலிடத்தில் உளளது. தமிழகம் மற்றும் கோவா, அதற்கடுத்த இடங்களில் உள்ளன. ஒன்றியப் பகுதிகளில், புதுச்சேரியும், வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூரும், இதில் முதலிடத்தில் உள்ளன. 

நிதி நிர்வாகப் பிரிவில், கர்நாடகா, முதலிடத்தில் உள்ளது. மஹாராஷ்டிரா, தெலுங்கானா, குஜராத், தமிழகம் அதற்கடுத்த இடங்களில் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் உத்தரண்ட்; ஒன்றியப்பகுதிகளில், டில்லி, முதலிடத்தைப்பிடித்துள்ளன. சமூக நலம் மற்றும் மேம்பாட்டு பிரிவில், சத்தீஸ்கர், முதலிடத்தைப் பிடித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மேகாலயாவும், ஒன்றியப்பகுதிகளில் டாமன் மற்றும் டயூவும், முதலிடத்தைப் பிடித்தன.

வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளில், மத்தியபிரதேசம், முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், அதற்கடுத்த இடங்களில் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில், மிசோரம் மற்றும் ஒன்றியப்பகுதிகளில், டாமன் மற்றும் டையூ, முதலிடத்தைப் பிடித்தன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,379.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.