Show all

தெலுங்கானா பெண்கள் சாதனை! ஆறு ஆசிய நாடுகளில், அறுபது நாட்கள் பைக்கில் பயணித்து

26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஐம்பத் தொன்பது நாட்களுக்கு முன்பு தெலுங்கானா சுற்றுலா வளர்ச்சிகழகம் சார்பில் நான்கு பெண்கள் ஆறு தென்கிழக்காசிய நாடுகளுக்கு பைக் மூலம் சுற்றுலா புறப்பட்டனர். நாட்டின் 15 மாநிலங்கள் வழியாக சென்று மணிப்பூர் மாநில எல்லைவழியே மியான்மர் நாட்டிற்கு சென்றனர். தொடர்ந்து தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், மற்றும் வங்கதேசத்தில் மொத்தம் 16,992 கி.மீ தூரம் வரையில் சுற்றுப்பயணம் செய்துள்ளனர்.

இது குறித்து தெலுங்கான மாநில சுற்றுலா வளர்ச்சி கழகத்தை சேர்ந்த இயக்குனர் மனோகர் கூறுகையில், பெண்களின் பயணத்தின் போது பல்வேறு தர மக்களைச் சந்தித்து தெலுங்கானா மாநில சற்றுலா குறித்தும் இந்தியா குறித்தும் விளக்கியதாகவும் கூறினார். மேலும் வேறு எந்த மாநிலமும் இதுவரை செய்யாத இந்த தனித்துவமான முயற்சியில் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக கூறினார். 

தென்கிழக்காசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வந்த பெண்களில் ஒருவரான சாந்தி சூசன் மாநில காவல் துறையில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பயணம் குறித்து அவர் கூறுகையில், இப்போது நான் வித்தியாசமாக விசயங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன், என்னை புதிதாக்குவதற்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பாக இருந்தது, நான் எந்த சவாலும் எடுக்க முடியும் என்பதில் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன், என்று அவர் கூறினார்.

தனித்துவமான தெலுங்கானப் பெண்களின் இந்த முயற்சியை வாழ்த்துவோம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,752.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.