Show all

பெங்களூருவை 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 3-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

அதைத்தொடர்ந்து, பெங்களூரு அணி சார்பில் குயின்டான் டி காக், மெக்கல்லம் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். டி காக் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். இவர்கள் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ரன்னை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய மெக்கல்லம் 43 ரன்கள் எடுத்தும், அடுத்து களமிறங்கிய டி வில்லியர்ஸ் அதிரடியாக 23 பந்தில் 5 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 44 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். அதை தொடர்ந்து விராட் கோலி 31 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக பெங்களூரு அணி 20 வர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. கடைசியாக மந்தீப் சிங் அதிரடியாக விளையாடி 18 பந்தில் 37 ரன்கள் குவித்தார். கொல்கத்தா அணி சார்பில் வினய் குமார் மற்றும் நிதிஷ் ராணா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து, 177 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக சுனில் நரேனும் கிரிஸ் லின்னும் களமிறங்கினர். கிறிஸ் லின் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரரான சுனில் நரேன் அதிரடியாக 19 பந்துகளில் 5 சிக்சர், 4 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த  உத்தப்பா 12 ரன்களில் வெளியேறினார். அதை தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் மற்றும் நிதிஷ் ரானா நிதானமாக விளையாடி அணியின் ரன்னை அதிகரித்தனர். நிதிஷ் ரானா 34 ரன்களிலும், அடுத்து இறங்கிய ரிங்கு 6 ரன்களிலும், அவரை தொடர்ந்து வந்த ஆண்ட்ரே ரசல் 9 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 35 ரன்களுடனும், வினய்குமார் 6 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

கொல்கத்தா அணி சார்பில் கிரிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

2018 IPL Team Position
TEAM M W L NRR Points
KKR 1 1 0 +0.598 2
KXIP 1 1 0 +0.567 2
CSK 1 1 0 +0.271 2
RR 0 0 0 0 0
  RCB 0 0 0 0 0
SRH 0 0 0 0 0
MI 1 0 1 -0.271 0
DD 1 0 1 -0.567 0
RCB 1 0 1 -0.598 0

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.