Show all

கிடைக்காது! காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்கிற நிர்பந்தத்தின் பலவீனத்தை சரிசெய்யாமல்

26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசும், அறங்கூற்று மன்றமும் ஒன்றையொன்று சார்ந்த அமைப்புகள். நடுவண் அரசு சட்டத்தை இயற்றும் அமைப்பு. அறங்கூற்று மன்றம் நடுவண் அரசு இயற்றிய சட்டத்தைப் பாதுகாக்கும் அமைப்பு. நடுவண் அரசு அந்த வினாடி வரை போட்ட சட்டங்களை அறங்கூற்று மன்றம் தீர்ப்புக்கு எடுத்துக் கொள்ளலாம். அறங்கூற்று மன்ற தீர்ப்பை செல்லாததாக்கும் வகையில் நடுவண் அரசு சட்டம் போடலாம். தீர்ப்பு சொல்லுகிற இடத்தில் அறங்கூற்றுமன்றம் இருந்தாலும், அந்தத் தீர்ப்பை தீர்மானிக்கிற இறுதி முடிவு நடுவண் அரசினுடையதே.

மாநில அரசுக்கும் சட்டம் போடுகிற உரிமை இருக்கிறது. நடுவண் அரசு போட்ட சட்டத்திற்கு சார்பான சட்டங்களைத் தான் மாநில அரசுகள்  போட முடியும். நடுவண் அரசு போட்ட சட்டத்திற்கு முரண்பட்டதாக மாநிலஅரசு சட்டம் இருந்தால் அது செல்லுபடியாகாது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி நடுவண் அரசில் பொறுப்பேற்றவர்கள் எதையும் சாதிக்கலாம். நள்ளிரவில் திடீரென்று 500, 1000 ரூபாய்தாள்கள் செல்லாது என்று அறிவித்தது போல. அதற்கு எதிராக அறங்கூற்றுமன்றம் ஒரு ஆணியும் பிடுங்க முடியாது. 

மோடி விரும்பினால் இன்று இரவே இனி இந்தியாவின் ஆட்சி மொழி தமிழே என்று அறிவிக்க முடியும். அப்படி அறிவித்தால் சட்டபடி அதை மாற்ற முடியாது. 

பெரும்பான்மை பெற்ற நடுவண் அரசால் எதைவேண்டுமானலும் சாதிக்க முடியும். அதனால் தான், எந்தக் கட்சியும் பொரும்பான்மை ஆட்சிக்காக மக்களிடம் தவம் இருக்கின்றன. 

நடுவண் அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று முடிவெடுத்தால், சட்டப் படி நாம் அதை மாற்றிஅமைக்க, இநதிய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை. 

மோடி அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டாம் என்றோ, காவிரி மோலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றோ இன்னும் முடிவு எடுக்க வில்லை. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் சாத்தியப் படாது என்று தமிழக பாஜக மோடிக்கு நெருக்குதல் தரவில்லை. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் சாத்தியப் படாது என்று தமிழக ஆளும் அதிமுக நெருக்குதல் தரவில்லை. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கமல் திமுகவிடம் இருந்து தப்ப முடியாது என்கிற அச்சமும் மோடி அரசுக்கான நிர்பந்தமாக இல்லை. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவிட்டால், காங்கிரசுக்கு சாதகமாகி விடும் என்கிற அச்சமும் மோடி அரசுக்கான நிர்பந்தமாக இல்லை. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான நிர்பந்தமாக இருப்பது 1.அறங்கூற்றுமன்றம் இதுவரையிலான நடைமுறைகளை வைத்து சொல்லி விட்ட தீர்ப்பு. (மோடி அரசுக்கு- அறங்கூற்று மன்றத்தை சமாளிப்பதற்கு, அது புரிய வில்லை, இதுபுரிய வில்லை என்கிற நடிப்பு போதுமானது.) 

2.தன்னார்வமாக போராடும் தமிழக மக்களும், நடுவண் அரசு புலனாய்வுத் துறை மூலம் பட்டியல் இட்டு வைத்து இருக்கிற, தமிழக அடையாளத்தை முன்னெடுக்கிற சில கட்சிகளும்தாம். 

இந்த இரண்டாவது நிர்பந்தத்தை சமாளிப்பதற்குதான், சூரப்பா துணைவேந்தர் நியமனம், ஐபிஎல் கிரிக்கெட், ஐடிரெய்டு  போன்ற திசை திருப்பல்கள். 

ஆனாலோ! நடுவண் அரசு காவிரி மோலாண்மை அமைக்க வேண்டாம் என்பதற்கான நிர்பந்தம் இருக்கவே செய்கிறது. கர்நாடகம் காங்கிரஸ் வசம் சென்று விடக்கூடாது என்கிற கர்நாடகத் தேர்தல் நிர்பந்தம். கர்நாடக அடையாள அமைப்புகளின் போராட்டம் ஒரு நிர்பந்தம். தமிழகத்தில் தமிழ் அடையாள அமைப்புகளின் போராட்டத்தை தமிழக அரசு ஒடுக்கி விடும். கர்நாடக அடையாள அமைப்புகளின் போராட்டத்தை கர்நாடக அரசு தூண்டி விடும். 

ஆக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டாம் என்கிற நடுவண் அரசுக்கு இருக்கிற நிர்பந்;தத்தின் பலமும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்கிற நிர்பந்தத்தின் பலவினமும் சரிசெய்யப் படும் போதுதான் காவிரி மோலாண்மை வாரியம் அமைக்கலாம் அல்லது அமைக்க வேண்டாம் என்கிற உறுதியான முடிவை எடுத்து மோடி அரசு செயல் படுத்தும்.

'தீதும் நன்றும் பிறர்தர வாரா!

நோதலும் தணிதலும் அவற்றோடு அன்ன!'

என்பார் கணியன் பூங்குன்றனார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்கிற நிர்பந்தத்தின் பலவீனத்தை சரிசெய்யாமல் (திமுக காங்கிரசை கைகழுவாமல் தன்னை வலுப் படுத்திக் கொள்ள முடியாது.) காவிரி மேலாண்மை வாரியம் நமக்கு கிடைப்பது முயற்கொம்பே. 

இன்று அறங்கூற்று மன்றம் தெளிவாகச் சொல்லி விட்டது. எடுத்;;;;;;துக் கொடுப்பது தான் எங்கள் வேலை! கடமையாற்ற வேண்டியது உங்கள் வேலையே என்று. கடமை ஆற்ற வேண்டியது என்னமோ நடுவண் அரசுதான்.கடமையை நிர்பந்திக்க வேண்டியவர்கள் தேவையிருப்பவர்கள். நிர்பந்திக்கிறவர்களை நடுவண்அரசு தேவையிருப்பவர்களாக முன்னெடுக்கும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,752.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.