Show all

ஏர்டெல்லிற்கு எதிராக ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்தது டாடாடொகொமோ

ரிலையன்ஸ் ஜியோவும் டாடா டெலி சர்விஸ் நிறுவனமும் பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள இண்டர்கனக்ட் பயன்பாடு கட்டணங்கள் குறித்த வழக்கிற்கு எதிராகப் பேசியுள்ளன.

     வயர்லெஸில் இருந்து வயர்லெஸ் நெட்வொர்க்கை தொடர்பு கொள்ளும் போது நிமிடத்திற்கு 14 பைசா கட்டணமாக உள்ளது. இதனை நெறிப்படுத்த வேண்டும் என்று ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்து உள்ளன.

     இந்த வழக்கிற்கு எதிராக ரிலையன்ஸ் நிறுவனமும், டாடா டெலி சர்விஸ் நிறுவனமும் மனுக்களை அளித்துள்ளனர். இந்த வழக்கு ஜனவரி 9-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகின்றது.

     வோடாபோன் நிறுவனம் முதலில் இந்த வழக்கை தொடங்கியது. பின்னர் ஏர்டெல் நிறுவனமும் டிராயிக்கு எதிரான இந்த வழக்கில் இணைந்தது.

     இப்போது ஜியோவும், டாடா நிறுவனமும் ஏர்டெல் மற்றும் வோடாபோனுக்கு எதிராக மனுவைத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.