Show all

நானோ காரை விற்பனைச் சரிவிலிருந்து மீட்டெடுக்க டாடா நிறுவனத்தின் புதிய யுக்தி! வெல்லுமா

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: டாடா நிறுவனம் நானோ என்ற பெயரில் மிகக்குறைந்த விலை காரை அறிமுகம் செய்தது. இது பொதுமக்களிடையே தொடக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. விலையை உயர்த்திக் கொண்டே போகிற நிலையில், நானோ காரின் விற்பனை சரிந்து வருவதை ஒட்டி, அதனை மின்சக்தி காராக மாற்றி விற்பனை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முன்னதாக மஹிந்திரா நிறுவனம், இதுபோன்ற மின்சக்தி கார் உற்பத்தியில் ஈடுபட்டது. நாக்பூரில் ஓலா நிறுவனத்துடன் இணைந்து, மஹிந்திரா நிறுவனம் மினசக்;தி வாடகை கார்களை அறிமுகம் செய்தது.

இதேபோன்று டாடா நிறுவனமும் ஓலாவுடன் இணைந்து, மின்சக்தி வாடகை கார் சேவை வழங்க திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக அதிக காற்று மாசுபாடு நிறைந்து காணப்படும், டெல்லியில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இதன் சோதனை ஓட்டம் கோவையில் நடத்தப்பட்டது. இதற்கிடையில் டியாகோ மின்சக்தி காருடன், டைகர் மின்சக்தி காரை அறிமுகம் செய்யவும் டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,615

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.