Show all

தமிழர் முனிராசு, இந்திய காவல்பணித்துறை அதிகாரிக்கு உ.பி.யில் சிறந்த காவல் பணிக்கான அரசு விருது

14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களில் சிறப்பாகப் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளைப் பாராட்டி நடுவண் அரசால் விருது வழங்கப்படுகிறது. குடியரசு நாளன்று வழங்கப்படும் இதுபோன்ற விருதுகள் உ.பி. சார்பிலும் தனியாக வழங்கப்படுகின்றன.

      சிறந்த காவல் பணி செய்தமைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வௌ;ளிப்பதக்கம் வழங்கப்படுகிறது. வௌ;ளிப்பதக்கம் பெற்ற பின் சிறந்த காவல் பணி செய்பவர்களை பாராட்டி தங்கப்பதக்கம் அளிக்கப்படுகிறது.

      இதில் வௌ;ளிப்பதக்கங்களில் ஒன்றாக தமிழரான ஜி.முனிராசு என்பவருக்கும் நேற்று வழங்கப்பட்டது. இந்திய காவல் பணித்துறை அதிகாரியான முனிராசு உ.பி. மாநில பிரிவு அதிகாரியாக உள்ளார். இவருக்கான விருதினை முனிராசுவுக்கு புலந்த்ஷெஹரின் குடியரசு நாள் விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட அந்தத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் போலாசிங்; வழங்கினார்.

      உ.பி.யின் மேற்குப்பகுதியில் உள்ள புலந்த்ஷெஹர் எனும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக முனிராசு பணியாற்றுகிறார். வழிப்பறி, கொள்ளை மற்றும் பாலியல் பலாத்காரக் குற்றங்களுக்கு பெயர் போன மாவட்டமாக இது உள்ளது. சிறந்த காவல்பணி அதிகாரியாகப் பெயர் பெற்ற முனிராசு குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை பிடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

      அப்போது 15 முறை அவர் மீது குற்றவாளிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி இருந்தனர். இதன் தற்காப்பிற்காக முனிராசு திருப்பி சுட்டதில் இரண்டு குற்றவாளிகள் பலியாகி உள்ளனர். உ.பி. அரசால் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த 54 குற்றவாளிகள் முனிராசுவால் கைது செய்;யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

      இவர் பணியாற்றும் புலந்த்ஷெஹர் மாவட்டம், பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதில் உ.பி.யில் சிறந்ததாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

      விவசாயக் குடும்பத்தில் பிறந்து அறி.மு (Master of Science) பயின்ற முனிராசு தர்மபுரியின் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர்.

      உ.பி.யில் பணியாற்றும் இந்தியக் காவல் பணித்துறை அதிகாரிகளில் ஏழு பேர் தமிழர்களாக உள்ளனர். இவர்களில் இருவர் மட்டுமே மூத்தவர்கள். இளைய அதிகாரிகளான அந்த தமிழர்களை உ.பி.யின் பதட்டமான மற்றும் குற்றவியல் செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் உ.பி. முதல்வர் தனிக்கவனம் எடுத்து அமர்த்தி உள்ளாராம்.

      -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,680

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.