Show all

சுஷ்மா ஸ்வராஜ் திடீர் உடல்நிலை குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ளார்

நடுவணரசு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்(64) திடீர் உடல்நிலை குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

நடுவணரசு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நுரையீரல் பாதிப்பு காரணமாக நேற்று மாலை 5 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் தனி பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

முதல்நிலை சிகிச்சைக்குப்பிறகு இரவு 10 மணிக்கு கார்டியோ நியூரோ மையத்துக்கு மாற்றப்பட்டடுள்ளார்.

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை என மருத்துவமனையில் மூத்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.