Show all

விழாக்கோலம் பூண்டிருந்த மதுரையில் சித்திரை திருவிழா நிறைவடைந்தது

மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்தாய்ப்பாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கடந்த 22-ந் தேதி நடந்தது.

இதையடுத்து, ராமராயர், தேனூர் மண்டபங்களில் எழுந்தருளினார். பின்பு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார்.

ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய கள்ளழகர் தசாவதார நிகழ்ச்சி நடந்தது

நேற்று முன்தினம் அதிகாலை 6 மணிக்கு மோகனாவதாரத்தில் வீதி உலா சென்றார்.

பின்னர் இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனம் நடைபெற்றது. நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதே திருக்கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் வையாழி ஆகி அங்கிருந்து அழகர் மலைக்கு புறப்பட்டார். அவுட் போஸ்ட் மாரியம்மன்கோவில், மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இருப்பிடம் சென்று அடைகிறார்.

 

இதன்மூலம் கடந்த சில நாட்களாக மதுரையில் விழாக்கோலம் பூண்டிருந்த இந்த ஆண்டு சித்திரை திருவிழா நிறைவடைந்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.