Show all

மோடியையும் விசாரிக்கலாம் என்னும் உச்சநீதிமன்ற உத்தரவு காவேரி மோலாண்மை வாரியம் போலாகுமா

லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று  நடுவண் அரசுக்கு உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், இந்த உத்தரவை தாமதப்படுத்தக்கூடாது என்றும் கண்டிப்புடன் கூறியுள்ளது.

     ஊழலை ஒழிக்க வகைசெய்யும் சட்டம்தான் லோக்பால். ஊழலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் குறித்து மக்கள் புகார் அளித்தால், அது தொடர்பாக விசாரணை நடத்தி, தண்டிக்கக்கூடிய அதிகாரம் ‘லோக்பால்’ ‘லோக் ஆயுக்தா’ ஆகிய அமைப்புகளுக்கு இருக்கிறது.  இந்த அமைப்புகளின் தலைவர்களை நியமிக்க, நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரையும் சேர்த்து குழு அமைக்க வேண்டும் என்பதுதான் லோக்பால் சட்ட அமைப்பு விதி.

     லோக்பால், லோக் ஆயுக்தா பதவிகளை உருவாக்க, நாடாளுமன்றத்தில் 2014ல் சட்டம் இயற்றப்பட்டது. சட்டம் இயற்றி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், மோடி அரசு இந்தச் சட்டத்தை அமலுக்குக் கொண்டுவருவதில் தாமதப்படுத்திவருவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

     இந்த விவகாரம்குறித்து மோடி அரசு அளித்த விளக்கத்தில்,

மக்களவையில் எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்தாலும், எதிர்க்கட்சிக்கான தகுதியைப் பெறுவதற்குப் போதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் கட்சியிடம் இல்லை. லோக்ஆயுக்தா சட்டப்படி, எதிர்க்கட்சித் தலைவரும் தேர்வுக்குழுவில் இடம்பெற வேண்டும். தற்போது எதிர்க்கட்சி தலைவர் இல்லாத காரணத்தினால், அந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவேண்டியுள்ளது. இந்தச் சூழலில், லோக்பால் சட்டத்தை அமல்படுத்த முடியாது.

என்று கூறப்பட்டிருந்தது.

     லோக்பால் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

‘ஊழலை ஒழிக்க வகைசெய்யும் லோக்பால் சட்டத்தை, நடுவண் அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்தச் சட்டத்தை அமல்படுத்த முடியவில்லை என்று இனி நடுவண் அரசு எந்த விளக்கமும் அளிக்கக் கூடாது.  நீதிமன்ற உத்தரவை நடுவண் அரசு தாமதப்படுத்தக்கூடாது’

என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

     உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, நடுவண் அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

மாநிலக் கட்சிகளைச் சின்னாபின்னப் படுத்துவது, மாநிலங்களுக்கான மின்சக்தி உடைமைகளைப் பிடுங்குவது, ஹிந்தி மொழித் திணிப்பு, மீனவர்கள் வேளாண்பெருமக்கள் ஆகியோர் பிரச்சனைகளைக் கண்டு கொள்ளாமல் வாளாயிருப்பது, மாநில வரி உரிமைகளுக்கு எதிரான சரக்கு மற்றும் சேவை வரி, குடும்ப அட்டை எரிவாயு மானிய ஏமாற்று,

குடும்ப அட்டை என்கிற மாநில உரிமைக்கு எதிரான ஆதார் அட்டை,

என பல முனைகளில் மாநிலங்களின் கழுத்தை நெறித்துக் கொண்டிருக்;கும் மோடிக்கும் மோடி அரசுக்கும் பின்னடைவு ஏற்பட்டேயாக வேண்டும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.