Show all

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே அப்பத்தைப் பிரித்துத் தர ஆசைப்படும் சீனா

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான காஷ்மீர் பிரச்னையில் பஞ்சாயத்து செய்வதாக சீனா தன்னுடைய தன்னார்வத்தினை மறைமுகமாக வெளிப்படுத்தி வருகிறது.

     தென்னாசியாவில் தன்னை ஒரு வலிமையான மற்றும் சக்திவாய்ந்த நாடாக நிலைநிறுத்த காஷ்மீர் பிரச்னையில் பஞ்சாயத்து செய்வதற்கு ஆர்வம் காட்டிவருகிறது சீனா.

     இதனை சீனாவில் வெளிவரும் ‘குளோபல் டைம்ஸ்’ இதழ் ஒரு விரிவான செய்தியாகவே வெளியிட்டுள்ளது. இந்தக் ‘குளோபல் டைம்ஸ்’ இதழ் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் சீனப் பதிப்பகமாகும்.

     இதில் சீனா, பாகிஸ்தான்-சீன எல்லையில் சுமார் 50 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளதால் காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பதில் மறைமுக ஆர்வம் காட்டிவருவதாகத் தெரிவித்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்த சீனா முயலும் என வெளிப்படையாகவே கூறப்பட்டு வருகிறது.

     மேலும், அந்த இதழ் கட்டுரையில்,

‘சீனா எப்போதும் அண்டை நாட்டு உள்விவகாரங்களில் தலையிடுவதை விரும்பாது. அதற்காக சீன நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள பகுதிகளில் முதலீட்டுப் பாதுகாப்புக்காக சில முயற்சிகளை மேற்கொள்வதிலிருந்து பின்வாங்காது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

     தன்னுடைய பிராந்திய நிலைத் ;தன்மையினை நிலைநாட்டவே எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இந்தியா- பாகிஸ்தான் இடையே நுழைவதற்கான வாய்ப்பினைப் பயன்படுத்தி வருவதாகவே தெரிகிறது.

     தற்போது பாகிஸ்தானுடனான உறவினை வளர்க்கும் முயற்சியில் பெரும் அக்கறை செலுத்திவரும் சீனா, தன்னுடைய இதழின் வாயிலாக தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.