Show all

மதச்சார்பின்மைமண் தமிழகத்தை மதச்சார்பின்மைக்கு பாதுகாப்பளிக்க உச்சஅறங்கூற்றுமன்றம் ஆணை

12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கே.எம்.அசோகன் என்பவரது மகள் அகிலா என்கிற ஹாதியா என்பவரை மதம் மாற்றி ஷபின் ஜகான் என்பவர் திருமணம் செய்தார். இத்திருமணத்தை எதிர்த்து அசோகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த கேரள உயர்அறங்கூற்றுமன்றம்

திருமணம் அவசரமாகவும் ரகசியமாகவும் நடந்ததில் சந்தேகங்கள் உள்ளன. இதில் ‘லவ் ஜிகாத் சதி இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது என்று கூறி திருமணத்தை ரத்து செய்தது. இதனையடுத்து வழக்கு உச்சஅறங்கூற்று மன்றத்திற்குச்

சென்றது.

ஹாதியா கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார் என அவருடைய தந்தையின் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

ஏற்கனவே உச்சஅறங்கூற்றுமன்றம்

உத்தரவிட்டதன்படி ஹாதியா இன்று உச்சஅறங்கூற்று மன்றத்தில்

அணியப் படுத்தப்பட்டார். இருதரப்பு வாதத்தின் போது ஹாதியா பேசுகையில், கடந்த 11 மாதமாக நான் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டு உள்ளேன். நான் ஒரு நல்ல குடிமகனாக, மருத்துவராக இருக்க வேண்டும். என்னுடைய நம்பிக்கையை உண்மையாக நேசிக்க வேண்டும் என்றார்.

கேரள மாநில அரசின் செலவில் நீங்கள் படிப்பை தொடர விரும்புகிறீர்களா? என உச்சஅறங்கூற்றுமன்றம் எழுப்பிய கேள்விக்கு,

‘நான் படிப்பை தொடர விரும்புகின்றேன், என்னுடைய கணவர் என்னை பார்த்துக் கொள்ள இருக்கும் போது மாநில அரசின் செலவில் படிக்க விரும்பவில்லை என்றார்.

இதனையடுத்து ஹாதியா மருத்துவம் படிக்கும் சேலம் மருத்துவ கல்லூரியின் டீன் அவருக்கு பாதுகாவலராக இருக்க வேண்டும் என உத்தரவிட்டது. மருத்துவ கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் அவரை மீண்டும் சேர்த்துக் கொள்ளவேண்டும். கல்லூரி நிர்வாகம் ஹாதியாவை விடுதியின் விதிகளின்படி மற்ற மாணவர்களை நடத்துவது போன்று நடத்த வேண்டும்.

தமிழக அரசு ஹாதியா மருத்துவ பயிற்சி காலமான 11 மாதங்கள் பாதுகாப்பை வழங்க வேண்டும் என உச்சஅறங்கூற்றுமன்றம்

உத்தரவிட்டு உள்ளது.

ஹாதியாவுடன் நடைபெற்ற திருமணத்தை கேரளா உயர் அறங்கூற்றுமன்றம்

தள்ளுபடி செய்தததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷபின் ஜகான் தொடர்ந்த வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என உச்சஅறங்கூற்றுமன்றம்

தெரிவித்து உள்ளது.

மதம் மாறி திருமணம் செய்துக்கொண்ட கேரள மாணவி ஹாதியா சேலம் வந்தடைந்தார்.

ஹாதியா சேலம் ஹோமியோபதி கல்லூரியில் தனது படிப்பை தொடர உச்சஅறங்கூற்றுமன்றம் நேற்று அனுமதி அளித்தது. விமனம் மூலம் கோவை மேலும் கல்லூரி டீன் தான் மாணவியின் பாதுகாவலர் என்றும் மாணவியின் முழு பாதுகாப்புக்கும் அவர் தான் பொறுப்பு என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து மாணவி ஹாதியா டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு வந்தார். சாலை மார்க்கமாக சேலம் வந்தார்.

ஹோமியோபதி கல்லூரிக்கு வந்துள்ள மாணவி ஹாதியா தனது படிப்பை தொடரவுள்ளார்.

இதனிடையே சேலம் ஹேமியோபதி கல்லூரியில் தங்கி படிக்கவுள்ள ஹாதியாவை அவரது கணவர் சந்திக்க வாய்ப்பில்லை என கல்லூரி தாளாளர் தெரிவித்துள்ளார். சேலம் ஹோமியோபதி கல்லூரி மகளிர் விடுதி என்பதால் ஹாதியாவின் கணவரை சந்திக்க வாய்ப்பில்லை என்றும் கல்லூரி தாளாளர் கல்பனா கூறியுள்ளார்.

இதனிடையே சேலத்தில் தங்கி படிக்கவுள்ள ஹாதியாவுக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படும் என சேலம் துணை ஆணையர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

- தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,620

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.