Show all

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வது எப்படி: ஆம் ஆத்மி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்பாடு பற்றி டெல்லி சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் விவாதம் தொடங்கியது. மின்னணு வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பழைய மின்னணு வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்பட்டதாகவும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

     கடும் அமளிக்கிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வது எப்படி என்ற ஆம் ஆத்மி சட்டமன்றஉறுப்பினர் இன்று சட்டமன்றத்தில் செயல்முறை விளக்கம் அளித்துள்ளார்.

     டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. தொடக்கம் முதலே அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு பல வழிகளில் குடைச்சல் கொடுத்து வருகிறது பாஜக.

     பரபரப்பான சூழ்நிலையில் டெல்லி சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று தொடங்கியது. டெல்லி மாநகராட்சி தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டினர்.

     இதற்கு பாஜக சட்டமன்றஉறுப்பினர்கள் கூச்சலிட்டனர். பாஜக சட்டமன்றஉறுப்பினர் விஜேந்தர் குப்தா, அதிகமாக கூச்சலிட்டதோடு ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக முழக்கமிட்டார்.

     இதனையடுத்து பாஜக சட்டமன்றஉறுப்பினர் விஜேந்தர் குப்தாவை வெளியேற்றுமாறு சட்டப் பேரவைத்தலைவர் உத்தரவிட்டார். அவை காவலர்கள் விஜேந்தரை குண்டு கட்டாக தூக்கிக் கொண்டு போய் வெளியேற்றனர். எனினும் விஜேந்தர் குப்தா அவை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.

     பிற்பகலில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது, அப்போது ஆம் ஆத்மி சட்டமன்றஉறுப்பினர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கொண்டு வந்து செயல்முறை விளக்கம் அளித்தார். பாஜகவினர் எவ்வாறு முறைகேடு செய்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.