Show all

துப்புறவு தொழிலாளி கர்ப்பிணிபெண் சாவித்ரிதேவி கண்மூடித்தனமாக தாக்கப்பட்டார்

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்திர பிரதேச மாநிலம் புலன்ட்ஷர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் துப்புறவு தொழிலாளியான சாவித்ரி தேவி என்ற தலித் பெண் ஒவ்வொரு வீட்டிலும் குப்பைகளை அள்ளுவதற்காக சென்றார்.

இந்நிலையில் ஒரு உயர் ஜாதி வீட்டில் குப்பைகளை அள்ளும்போது உயர் ஜாதி பெண்ணான அஞ்சு என்பவரது வாளியில் சாவித்ரியின் கை பட்டுவிட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அஞ்சு சாவித்ரியை நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் கையில் கிடைத்த கட்டைகளால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். படுகாயமடைந்த சாவித்திரி தேவி ஆறுநாட்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து சாவித்ரியின் கணவர் தெரிவிக்கையில் காயமுற்ற மனைவியை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது அவர்கள் அனுமதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தாமதமாக அந்த கிராமத்திற்கு சென்ற காவல்துறை இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.