Show all

தூய்மை இந்தியா திட்டத்தில் சிவசேனா ஆலோசனையை மோடி ஏற்பாரா

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூய்மை இந்தியா திட்டத்திற்காக விளம்பரத்திற்கு செலவு செய்யும் தொகையில், கழிப்பறைகளைக் கட்டலாம் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான, சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கங்கை ஆற்றுத் தூய்மை திட்டத்திற்கு நடுவண் அரசு கோடிக்கணக்கில் பணம் செலவழித்தது. ஆனால் அத்திட்டத்தால் ஒரு பயனும் ஏற்படவில்லை. இதே போல் தான் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்துக்கும் ஏற்படும்.

தூய்மை இந்தியா திட்டத்துக்காக பிரதமர் தன் கையில் துடைப்பத்தை எடுத்தார். அடுத்து வால் பிடித்தாற்போல பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என வரிசையாக துடைப்பத்தை கையில் எடுத்தனர்.ஆனால் இது புகைப்படம் எடுக்க மட்டுமே.

நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப கழிப்பறைகள் கிடையாது. எனவே திறந்தவெளியில் மலம் கழிக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். தூய்மை இந்தியா திட்டத்துக்கு வெற்று விளம்பரங்களுக்கு, செலவிடப்படும் பணத்தை கொண்டு நாட்டில் கழிப்பறைகளை நடுவண் அரசு கட்ட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,615

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.