Show all

முக்கியநபர் கலாச்சாரத்திற்கு எதிராக நடுவண் அமைச்சரோடு கடுமையாக வாதடிய பெண் மருத்துவர்

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அமைச்சருக்காக விமானம் தாமதம் ஆனதை தொடர்ந்து பெண் மருத்துவர் ஒருவர் நடுவண் அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள விமானநிலையத்தில் நடுவண் அமைச்சர் அல்போன்ஸ் கன்னதானம் வருகைக்காக விமானம் புறப்பட தாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

அதே விமானத்தில் பெண் மருத்துவர் நிராலா என்பவர் நோயாளியை காண்பதற்காக பயணம் செய்ய காத்திருந்தார். நடுவண் அமைச்சருக்காக விமானம் புறப்படுவது தாமதப்படுத்தப் படுவதை அறிந்த பெண் மருத்துவர் நடுவண் அமைச்சர் விமான நிலையத்திற்கு வந்த உடன் அவருடன் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இனிமேலும் விமானம் தாமதப் படுத்தப் படமாட்டாது என எழுதி தரும் படி கோரினார்.

இது தொடர்பான காணொளி இணைய தளங்களில் தீயாகப் பரவி வருகிறது. முக்கியநபர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தி பெண் மருத்துவருக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டுகள் குவிகின்றன.

இது குறித்து பெண் மருத்துவர் கூறுகையில் முக்கியநபர் கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,614

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.