Show all

மலர்கொடுத்து வரலாறு படைக்கும் மாணவர்கள்! வன்முறையில் மாணவர்கள் என்பதாக, பொய்முகவரி தந்த காவல்துறை வெட்கப்பட

அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் ஒருவர் பேசுகையில், அரசியலமைப்பு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக இந்திய மக்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கியுள்ளனர். இந்த அரசானது மதச்சார்பின்மையை அழிக்கப் பார்க்கிறது. மதச்சார்பின்மைதான் இந்திய அரசியலைப்பின் அடிப்படை. அரசியலமைப்பை காக்க நாங்கள் வீதிக்கு வந்துள்ளோம் என்று இந்தியாவின் உண்மையான முகவரியைத் தெளிவு படுத்தி பேசினார்.

05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாம் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த காவலர்கள் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இதில், சில மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். டெல்லி போலீஸாரின் இந்தச் செயலைக் கண்டித்து மாணவர்கள் டெல்லியில் திரண்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் நாங்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தோம் என்று தெரிவித்த பொய்யை- அசராமல், அமைதிப் போராட்டம் நடத்திவரும் டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாம் பல்கலைக்கழக மாணவர்கள் வெளுக்கவைத்து வருகின்றனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்கள் காவல்துறையினருக்கு ரோஜா பூக்களை வழங்குவது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தைக் கலக்குவதோடு, பார்க்கும் பெற்றோர்களின் நெஞ்;சை நெகிழ வைத்துக் கொண்டிருக்கறது.

இளம்பெண் ஒருவர் காவல்துறையினருக்கு ரோசா மலரை வழங்கும் புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது. அந்த மாணவி கையில் வைத்திருக்கும் பதாகையும் போராட்டத்தில் கவனம் பெற்றது. ‘நான் வரலாறு படிக்கிறேன் என என்னுடைய தந்தை நினைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அவருக்கு தெரியாது நான் இங்கு வரலாறு படைத்துக்கொண்டிருக்கிறேன் என்று’ அதில் எழுதப்பட்டிருக்கிறது.

அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் ஒருவர் பேசுகையில், அரசியலமைப்பு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக இந்திய மக்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கியுள்ளனர். இந்த அரசானது மதச்சார்பின்மையை அழிக்கப் பார்க்கிறது. மதச்சார்பின்மைதான் இந்திய அரசியலைப்பின் அடிப்படை. அரசியலமைப்பை காக்க நாங்கள் வீதிக்கு வந்துள்ளோம் என்று இந்தியாவின் உண்மையான முகவரியைத் தெளிவு படுத்தி பேசினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,372.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.