Show all

158கோடி! கடந்த ஓர் அண்டில் ஈட்டிய வருமானம், வலையொளி மூலம், எட்டு அகவை சிறுவன்

போபர்ஸ் இதழில் சாதனையாளராக இடம் பெற்றுள்ளார் எட்டு அகவை சிறுவன் ரியான் காஜி. அவர் படைப்பாளராக கடந்த ஓர் ஆண்டில் வலையொளி மூலம், ரூ.158.48 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.

05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: போபர்ஸ் இதழில் சாதனையாளராக இடம் பெற்றுள்ளார் எட்டு அகவை சிறுவன் ரியான் காஜி. அவர் படைப்பாளராக கடந்த ஓர் ஆண்டில் வலையொளி மூலம், 22 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.158.48 கோடி) வருமானம் ஈட்டியுள்ளார்.

ரியான் காஜி என்ற சிறுவனின் பெற்றோரால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரியான்உலகம் என்ற வலையொளி கண்மடை தொடங்கப்பட்டது. இந்தக் கண்மடையில் ரியான் விளையாடும் பொம்மைகளை விமர்சனம் செய்வது என காணொளி வெளியிட்டு வந்தனர். சில காணொளிகள் 100 கோடி பார்வையாளர்களை தாண்டி சென்றது. மேலும், கண்மடை உருவாக்கியதில் இருந்து அவர்கள் வெளியிட்டுள்ள மொத்த காணொளிகளையும் சேர்த்து 3500 கோடி பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,372.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.