Show all

கார் விபத்தை உருவாக்கிய ரஷ்ய தூதரக அதிகாரி

தலைநகர் டெல்லியின் தெற்கு பகுதியான மோதி பாஹ் பகுதியில் இன்று காலை ரஷ்ய தூதரக அதிகாரி ஒருவர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த  இருசக்கர வாகனம் மீது ரஷ்ய தூதரக அதிகாரியின் கார் மோதியது. மோதிய பின்னரும் நிற்காமல் வேகமாக சென்ற ரஷ்ய தூதரக அதிகாரியின் கார்  அருகில் இருந்த போலீஸ் தடுப்புகள் மீது மோதியது.

இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த போலீசார், தூதரக அதிகாரியிடம் விபத்து குறித்து விசாரணை நடத்த முற்பட்டார். ஆனால், இதற்கு ஒத்துழைக்க மறுத்த ரஷ்ய அதிகாரி, காரில் இருந்து இறங்க மறுத்து போலீசுடன் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும், போலீஸ் காவலர் நாயிப் சிங்கை தூதரக அதிகாரி தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அஜாராக்கிதையாக வாகனம் ஓட்டியதாக தூதரக அதிகாரி மீது இந்திய தண்டனைச்சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தூதரக அதிகாரி சிறப்பு சலுகை பெற்றவர் என்பதால் போலீசாரால் அவரை கைது செய்ய முடியாது. எனவே சம்பவம் குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு போலீசார் அறிக்கை அனுப்பியுள்ளனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.