Show all

தமிழ்நாட்டில் மழைவெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை தேசியப்பேரிடராக அறிவிக்க வேண்டும்

தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால்ஏற்பட்டுள்ள பாதிப்பை தேசியப்பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மழை வௌ;ளத்தால் தமிழகத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்து நிர்கதியாகிவிட்டனர் என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அடிப்படைக் கட்டமைப்புகளை மத்திய, மாநில அரசுகளின் நிதி மூலம் சீர்படுத்த வேண்டும்.

குடும்பங்களுக்கு ஏற்பட்ட இழப்பை தற்போது உள்ள நிவாரண முறையால் ஈடுசெய்யமுடியாது எனவும் ஜெயலலிதா கூறியுள்ளார். பாதிக்கப்பட்டோரில் பெருபான்மையானோர் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்ப்பிரிவினர். வாழ்நாள் முழுவதும் சேர்த்த பொருள், உடைமை வெள்ளத்தில்   அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. மொத்த உடைமைகளையும் பறிகொடுத்துவிட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். உடைமைகள் அனைத்தையும் இழந்தோருக்கு இழப்பீடு தர புதியமுறை வகுக்கப்பட வேண்டும் என அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

வீடுகளைக் காப்பீடு செய்தவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை உடனே மதிப்பீடு செய்ய வேண்டும். இழப்பை மதிப்பிடும் பணியை நிறுவனங்கள் உடனே மேற்கொள்ள அரசு உத்தரவிடவேண்டும். மேலும் இழப்பை மதிப்பீடு செய்து காப்பீட்டுப் பலனை உடனே நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று ஜெயலலிதா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தம் வாழ்க்கையை மீண்டும் தொடங்க காப்பீட்டுத்தொகை பெரிதும் உதவியாக இருக்கும். நிறுவனம் ஒரு வாரத்தில் பணியை முடிக்க நடுவண் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வீட்டுக்கடன் வசூலை சிறிதுகாலம் நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் டி.வி., ஃபிரிட்ஜ் உள்பட அனைத்தையும் இழந்துள்ளனர். மேஜை, நாற்காலி, சமையல் பாத்திரங்கள், துணிமணிகளையும் பறிகொடுத்துவிட்டனர். மேலும் பொருட்களை இழந்து தாங்க முடியாத துயரத்தில் பலஆயிரம் குடும்பம் சிக்கியுள்ளன என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். பலஆயிரம் குடும்பங்கள் இருசக்கர வாகனங்களை வௌ;ளத்தில் இழந்துவிட்டன. அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் தரவேண்டும். மீண்டும் வாழ்க்கையை தொடங்க, வங்கிகள் மூலம் ரூ. 5 லட்சம் வரை கடன் தர வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.