Show all

ரூ.20 கோடி நட்டஈடு கோரி ரூபா மீது மான நட்ட வழக்கு

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2கோடி லஞ்சப்பணம் கைமாறியதாக சிறைத்துறை தலைமை ஆய்வாளராக இருந்த ரூபா அரசுக்கு அறிக்கை பதிகை செய்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு அப்போதைய சிறைத்துறை மாவட்ட காவல் அதிகாரி சத்திய நாராயணராவ் ஆளானார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்த சத்திய நாராயணராவ் ரூபா மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்று அப்போது அறிவித்தார். இந்த நிலையில் பணி ஓய்வு பெற்ற சத்தியநாராயணராவ் தற்போது அவர் தெரிவித்தது போலவே பெங்களூரு குடிமை அறங்கூற்று மன்றத்தில் ரூபா மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளார். அதன்படி ரூ.20 கோடி நஷ்டஈடு கோரி உள்ளார். இது தொடர்பாக ரூபாவுக்கு அறங்கூற்று மன்றம் விளக்கஅறிக்கை அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

தற்போது போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு (பெங்களூரு) பிரிவு ஆணையராக பணியாற்றி வரும் ரூபாவிடம் மானநஷ்ட வழக்கு குறித்து கேட்டபோது கூறியதாவது:

அனைத்து வகையான பணிகளிலும் இதுபோன்ற பிரச்சினை வருவது பொதுவான ஒன்று தான். இதற்கு பயப்பட வேண்டியது இல்லை. இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன் இவ்வாறு அவர் கூறினார்

- தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,621

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.