Show all

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், சரக்கு மற்றும் சேவை வரிக்கு ஆதரவு பேச்சு

சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தால் மாநிலங்கள் இடையே உள்ள தடைகள் நீங்கி, இந்தியா சமநிலைப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடந்த பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,

சரக்கு மற்றும் சேவை வரி முறை நடைமுறைக்கு வந்தால், வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் மேலும் பலர் இடம்பெற வாய்ப்பு ஏற்படும்.  இதனால், பொருட்கள் விலை குறைய வாய்ப்பு ஏற்படுவதுடன், நாடு முழுவதும் பொதுவான சந்தையாக மாறும் என்றும் ராஜன் தெரிவித்தார்.

மேலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கடன் வாங்குவதில் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் இந்திய நிறுவனங்கள் அதிக அளவில் கடனை வாங்கிக் குவிப்பது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.