Show all

தென்னிந்தியாவில் வழக்கத்தைவிட அதிக மழை தொடரும் என ஐ.நா., எச்சரிக்கை

2016 பிப்ரவரி வரை தென்னிந்தியாவில் வழக்கத்தைவிட அதிக மழை தொடரும் என ஐ.நா., எச்சரிக்கை விடுத்துள்ளது. 2015-16க்கான எல் நினோ பாதிப்பு தொடர்பாக ஐ.நா., வெளியிடப்பட்ட அறிக்கையில், மத்திய மற்றும் தென்னிந்திய பகுதிகள் மழை மற்றும் வெள்ளம்  காரணமாக அதிகமாக பாதிக்கப்படும். இலங்கை, கம்போடியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து நாடுகள் மழை வெள்ளத்தால் அதிக பாதிப்பை சந்திக்கும். டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை தென்னிந்திய, இலங்கை, மாலத்தீவில் சராசரிக்கும் அதிகமாக மழை பெய்யும். அதனால் ஏற்படும் வெள்ளப்பெருக்கும் தொடரும். அதேநேரத்தில் பப்புவா நியூ கினியா உள்ளிட்ட பசுபிக் தீவுகளில் கடுமையான வறட்சி ஏற்படும் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.