Show all

ராஜகீழ்ப்பாக்கம் ஏரி, இரவுபகலாக சீரமைக்கப் பட்டு வருகின்றது

ராஜகீழ்ப்பாக்கம் ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யுமாறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கிய காலக்கெடு முடிந்து விட்டதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரிக்கரை சீரமைக்கும் பணியில் காவல்துறை,பொதுப்பணி துறை அதிகாரிகள் இரவுபகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம் நகராட்சியில் 105 ஏக்கர் 44 சென்ட் பரப்பளவு கொண்ட ராஜகீழ்பாக்கம் ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், அரசியல்வாதிகள் ஆகியோரின் முழு ஆசியுடன் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து, பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.

தற்போது ஏரி, ஆக்கிரமிப்பால் சுருங்கி சிறிய குட்டை போல் காணப்படுகிறது. இதனிடையே பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலை, வேளச்சேரி பிரதான சாலை ஆகியவற்றை இணைக்கும் ஈஸ்டர்ன் பைபாஸ் சாலையை ராஜகீழ்ப்பாக்கம் ஏரிப்பகுதியின் வழியாக அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அது அரசியல்வாதிகள் ஆசியுடன் ஆக்கிரமிப்பாளர்களால் தடைபட்டே வந்தது. மழைவௌ;ள பாதிப்பால் முட்டுக்கட்டை தகர்ந்து வழிகிடைத்திருக்கிறது.

இதற்காக ஏரியை ஆக்கிரமித்து கட்டி உள்ள வீடுகளை காலி செய்யுமாறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு பொதுப்பணித்துறையினர் நோட்டீசு வழங்கினார்கள். ஏரியில் ஆக்கிரமித்து கட்டி உள்ள மொத்தம் 1,400 வீடுகளுக்கு இந்த நோட்டீசு வழங்கப்பட்டது.

செம்பாக்கம் நகராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 8, 9, 10 ஆகிய வார்டுகள் இந்த ஆக்கிரமிப்பு ஏரியில் வருகிறது. ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யுமாறு பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டு காலக்கெடு முடிந்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.