Show all

ஆதார் குறித்து ரிசர்வ் வங்கி புதிய தகவல்

04,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வங்கிக்கணக்கு உடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு அப்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.

வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை தான். ஆனால், சட்ட விரோத பண பரிமாற்றத்தை தடுப்பதற்காக கடந்த 18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 (01.06.2017) நடுவண் அரசு வெளியிட்ட அறிக்கையில், வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள், புதிய கணக்கு தொடங்குபவர்கள் தங்களின் ஆதார் எண்ணையும், பான் கார்டு எண்ணையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி எந்த உத்தரவையும் பிறப்பிக்க வில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சட்டவிரோத பணப்பறிமாற்றத்தை தடுக்கும் விதமாக திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளின் படி வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமே என ரிசர்வ் வங்கி தற்போது தெரிவித்துள்ளது.

-இந்தியாவின் எல்லா நிருவாகமும் தன்னதிகார அமைப்பு போல முதலில் எழுச்சி காட்டி விட்டு அப்புறம் ஆளும் மோடி விருப்பத்தைதான் பிரதிபலிக்கின்றன. யாரும் எந்த சந்தேகமும் கேட்காதீர்! பார்த்துக் கொள்ளலாம்.

தமிழ்தொடர்ஆண்டு-5121 (2019) ல்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.