Show all

இட ஒதுக்கிட்டிற்கான வரலாற்றையே கேள்விக்குள்ளாக்கி யிருக்கிறது பாஜக! மேல்தட்டு மக்களுக்கும் 10விழுக்காடு இடஒதுக்கீடாம்

25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இடஒதுக்கீட்டு மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மாநிலங்களவையில் மேல்தட்டு மக்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் இடஒதுக்கீட்டு மசோதாவை நடுவண் அரசு பதிகை செய்துள்ளது.

ஏற்றதாழ்வு இல்லா, பத்தாயிரம் ஆண்டுகால தமிழக வரலாற்றை, 3500 ஆண்டுகளுக்கு முன்பு நாடோடிகளாக தமிழகத்தை அடைந்த ஆரியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக, அணுஅணுவாக ஊடாடிக் கெடுத்தார்கள். இங்கே தொழில் அடிப்படையில் இருந்த உரிமை சங்கமாக புழங்கி வந்த சாதியை, பிறப்படிப்படையான ஜாதி ஆக்கினார்கள். அது வரை தொழில் மாற, சாதியும் மாறி வந்த தமிழர்களை தொழில் மாறமுடியாதபடி ஜாதியில் கட்டினார்கள்.

தமிழ் இலக்கியங்கள், மருத்துவ நூல்;கள், கலைநூல்கள்  பரண்மீது ஏறின ; ஆடிப்பெருக்கில் நீரில் வீசப் பட்டன ; கரையாண்களுக்கு இரையாகின. தமிழும் நீசபாஷையாக தமிழர்களின் அவமானம் ஆக்கப் பட்டது.

தமிழ் மன்னர்களின் வேதகுருக்காளக ஆரியர்கள் அரியணை ஏறினார்கள். ஆரியர்களின் இராமயணமும், மகாபாரதமும் அரசவைக் காப்பியங்களாக்கப் பட்டன. தமிழ் மன்னர்களின் ஆட்சி, ஆரியர்கள் மேலாண்மை உடையதாக இருந்தது.

ஆரியர்கள் வரவுக்கு முந்தைய தமிழர்கள் உலகம் முழுவதும் கப்பல் செலுத்தி வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர். மன்னர்கள் படைஅணி அளித்து அவர்களின் வணிகத்தை ஊக்குவித்தனர். 

உலக அழகியாக இன்றும் பாராட்டப் பட்டு வருகிற எகிப்து அரசி கிளியோபட்ரா தன்னுடைய அழகுக்கு காரணம் தமிழகத்து முத்துகள் என்பாராம். தமிழக முத்துக்களை ஊறவைத்த பாலில்தான் அவர் குளிப்பாராம். 

எகிப்து நாட்டு அறிஞன் தாலமி, 'என்னாட்டு செல்வம் தமிழக வணிகர்களால் வெறுமனே முத்துக்களுக்காகவும், மயில்தோகைகளுக்காகவும், மெல்லிய துணியாடைகளுக்காகவும், நறுமணப் பொருட்களுக்காகவும் எல்லையில்லாமல் பெற்றுச் செல்லப் படுகிறது' என்று புலம்பியதாக எகிப்திய வரலாற்றில் காணப்படுகிறது. 

ஐரோப்பிய நாடுகளில் உள்ள வணிகர்களுக்கு, இந்த முத்துக்களுக்காகவும், மயில்தோகைகளுக்காகவும், மெல்லிய துணியாடைகளுக்காகவும், நறுமணப் பொருட்களுக்காகவும்- தங்கத்தையும், குதிரைகளையும் பெற்றுச் செல்வோரின் நாட்டை கண்டு பிடித்தாக வேண்டுமே என்கிற ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே யிருந்தது.

தங்கள் நாட்டு அரசுகளின் துணையோடு ஐரோப்பிய நாட்டினர் தனித் தனியாக கப்பல் கட்டி கடலில் பயணித்தனர். அந்த வகையாகத்தான் அnமிரிக்கவைச் சென்றடைந்த கொலம்பஸ் அமெரிக்காவிற்கு இந்தேயா என்று பெயரிட்டாராம். 

இன்றைய இந்தியா முழுவதும் ஆரியர்கள் வரவுக்கு முன்பாக தமிழர்களே விரவியிருந்தனர். அவர்கள் ஒட்டு மொத்த இந்தியாவை நாவலந்தேயம் என்று அழைத்தார்கள். அவ்வாறு தமிழர்கள் நாவலந்தேயம் என்று உச்சரித்ததை ஐரோப்பியர்கள் இந்தேயா என்று உச்சரித்தார்கள்.

இந்தியாவை உலகினரும், தமிழர்கள் மட்டுந்தாம் இந்தியா என்று எழுதுகிறோம். இந்தியாவில் தமிழகம் தவிர்த்த அனைத்து மாநிலத்தவர்களும் பாரத் என்று தான் எழுதுகிறார்கள். ரூபாய்தாளில் ஆங்கிலத்தில் இந்தியா என்று எழுதப் பட்டாலும் ஹிந்தியில் பாரத் என்று எழுதப் படுகிறது. இந்தியா என்பது தமிழ் என்பது ஆரியர்களுக்கு நன்றாகத் தெரியும் இந்தியாவை இந்தியா என்று எழுத மாட்டார்கள் பாரத் என்றுதான் எழுதுவார்கள்.

ஐரோப்பியர்கள் தமிழ் வணிகர்களைத் தேடி நாவலந்தேயம் வந்த போது, அவர்கள் ஆர்வமாக பார்க்க விரும்பிய தமிழ் வணிகர்கள் யாரும் இல்லை. தமிழர்களுக்கு வணிகமேயில்லை. தமிழர்கள் தமிழைத் தொலைத்து விட்டு வடமொழி சமஸ்கிருதத்திற்கு அடிமையாகிக் கிடந்தார்கள். எதார்த்த இலக்கியங்களை பரண் மீது வீசி விட்டு, அதித கற்பனை, மூடநம்பிக்கைகள் ஜாதிய ஏற்றதாழ்வுகளில் அவிழ்த்துக் கொட்டிய நெல்லிக்காய்கள் போல பிரிந்து கிடந்தார்கள்.

ஐரோப்பிய அறிஞர்கள் தான் தமிழின் தொன்மையை, தமிழர் பெருமைகளை, தமிழ் மொழியின் சிறப்பை தமிழர்களுக்கு உணர்த்தினார்கள். 

அவைகளை முதலாவதாகப் புரிந்து கொண்டு தமிழர்களை கரைசேர்க்க முனைந்தவர்தான் பெரியார். பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ.வெ.இராமசாமி 139 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தைத் தத்து எடுத்துக் கொண்ட தந்தை பெரியார்! 

சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முதன்மையான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. 

சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். 

இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரால்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது.

இவரின் சமுதாயப் பங்களிப்பைப் பாராட்டி யூனஸ்கோ நிறுவனம் 'புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி' என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.

இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்.

பெரியாரின் முழுமையான உழைப்பால்தான் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப் பட்ட, மற்றும் மலைச்சாதியினருக்கான இடஒதுக்கீடு என்கிற அரிய வாய்ப்பு தமிழ் மக்களுக்கு கிடைத்தது. பெரியாருக்கு பிற்புலமாக (காங்கிரசுக்கு அடிமையாவதற்கு முன்பு வரை) திமுக இருந்தது. 

தமிழத்தில் வளர்ச்சிக்கு இந்த இடஒதுக்கீடு பெரிய துணையாய் அமைந்தது.

இந்த நிலையில் தான் இன்றைக்கு பாஜக மேல்தட்டு மக்களில், வசதியில்லாதவர்களுக்கு பத்து விழுக்காடு இடஒதுக்கீடு கொண்டு வந்து இட ஒதுக்கிட்டிற்கான வரலாற்றையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,027.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.