Show all

ராகுலை மக்களிடம் போட்டுக் கொடுக்கிறாராம்! தோல்வி அச்சத்தில் தட்டுத்தடுமாறும் அமித்ஷா

20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: எதிர்வரப் போகும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமான, குஜராத் தேர்தலில் தோற்று விடுவோமோ என்கிற கிலி பாஜக மோடி கூட்டாளிகளுக்கு தொற்றிக் கொண்டது. கடலில் மாட்டிக் கொண்டவன்;;;;;;;;; கிடைத்ததை எல்லாம் பற்றிக்கொள்வதைப் போல, பறைசாற்றி மக்களைக் கவர சாதனைகள் எதுவும் இல்லாத நிலையில், மனம் போனபோக்கில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் ராகுலை மக்களிம் போட்டுக் கொடுப்பதாகக் கருதிக் கொண்டு அயோத்தி விவகாரத்தில் ராகுல் தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷா கேட்டுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் நிலம் தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை உச்ச அறங்கூற்றுமன்றத்தில் நேற்று தொடங்கியது. இதில் சன்னி முஸ்லிம் வக்ப் வாரியத்தின் சார்பில் காங். கட்சியை சேர்ந்த, மூத்த வழக்கறிஞர், கபில் சிபல் அணியமாகி வருகிறார்.

இவர் வழக்கின் விசாரணையை, ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121க்குப் பிறகு (ஜூலை,2019) விசாரணையைத் தொடங்க வேண்டும் என கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில் பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து,

குஜராத் தேர்தலை மனதில் வைத்தே மக்களைக் கவர, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் குஜராத்தில் உள்ள கோவில்களுக்கு எல்லாம் சென்று வருகிறார். அயோத்தி விவகாரத்தில் அவர் தனது கருத்தை கூறவில்லை. தனது நிலையை தெளிவுபடுத்த வில்லை.

ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கபில் சிபல் அயோத்தி வழக்கின் விசாரணையை ஒத்திவைக்குமாறு கூறி இழுத்தடித்து வருகிறார். கபில்சிபலின் கருத்து வரப்போகும் நாடளுமன்றத் தேர்தலை குறி வைத்து தான் என்பது தெளிவாகிறது என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,628

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.