Show all

குஜராத் தேர்தல் கருத்துப் பரப்புதலில் மோடி அரசின் அபத்தங்களை, பட்டியல் இட்டு கலக்குகிறார் ராகுல்

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத் சட்டமன்றத்;; தேர்தலில் கருத்துப் பரப்புதல் என்று பேருக்கு, நள்ளிரவில் ஒட்டு மொத்த இந்திய மக்களையும் நடுத் தெருவில் நாயாய் அலைய விட்டதைத் தவிர, மோடியின் சாதனை என்று பீற்றிக் கொள்ள எதுவும் இல்லாத நிலையில், பெரும்பாலும் ராகுலைப் பற்றி தனிமனித விமர்சனம் மட்டுமே மோடி செய்து கொண்டிருக்கும் நிலையில், ராகுல்- மோடி அரசின் அபத்தங்களை பட்டியல் இட்டு பேசுவதை மக்கள் ஆர்வத்தோடு கவனித்து வருகிறார்கள்.

குஜராத் மாநில இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடிவருவது தொடர்பாகவும் அங்குள்ள ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியக் குழு பரிந்துரையின்படி ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கப்படுவது குறித்தும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி அங்கு தேர்தல் கருத்துப் பரப்புதல் சூடு பிடித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பாஜக 22 ஆண்டு கால ஆட்சியில் செய்யாமல் விட்டப் பணிகளை ஒவ்வொன்றாகச் சுட்டிக்காட்டி, ராகுல் கருத்துப் பரப்புதல் மேடைகளில் மோடிக்கு சவால் விடும் கேள்விகளை முன்வைத்துவருகிறார்.

குஜராத்தில் பெண்கள் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பாக நேற்று கேள்வி எழுப்பி இருந்த அவர் இன்று (திங்கள்கிழமை) இளைஞர்கள் சந்திக்கும் வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்த அவர் கூறியுள்ளதாவது:

குஜராத் இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தால் தவித்து வருகின்றனர். 22 ஆண்டுகாலம் ஆட்சி நடத்தி வரும் பாஜகவும், அங்கு நீண்டகாலம் முதல்வராக பதவி வகித்த பிரதமர் மோடியும் அம்மாநில இளைஞர்களை வேலையில்லாவர்களாக மாற்றியுள்ளனர்.

7வது ஊதியக் குழு பரிந்துரைகள் அங்கு அமல்படுத்தப்பட வில்லை. அரசுப் பணிகள் அனைத்திற்கும், அரசு ஏதோ தனிப்பட்ட முதலாளி போல கொஞ்சம் கூட சமூகப் பொறுப்பில்லாமல் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே இளைஞர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

குறைந்தபட்ச சம்பளம் 18,000 ஆக உள்ள நிலையில், ஒப்பந்த அடிப்படையில் 5,500 ரூபாய் வழங்கப்படுகிறது. குஜராத் இளைஞர்களை வேலையில்லா திண்டாட்டத்தில் ஆழ்த்தி அவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது பற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார் ராகுல்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,625

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.