Show all

இவ்வளவு கேவலமான ஆட்சி நடக்கும் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் அரசின் வெற்றி நம்பத்தகுந்ததா

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேசியக் குற்றப்பிரிவு ஆணையம் கடந்த ஆண்டு நடைபெற்ற குற்றங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டது. இதில், உத்தரப்பிரதேசம்தான் தேசத்தில் நடக்கும் 14 விழுக்காடு குற்றங்களுக்குக் காரணமாகவுள்ளது என்ற தகவல் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது.

இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 2.6 விழுக்காடு குற்றங்கள் அதிகரித்துள்ளன. அந்த ஆண்டு 48,31,515 குற்றங்கள் நாடு முழுவதும் நடந்துள்ளன. இது, அதற்கும் முந்தைய ஆண்டைவிட 21,000 அதிகம்.

குற்றங்களில், கடத்தல் குற்றங்கள்தான் முதலிடத்தில் உள்ளன. கடத்தல் குற்றங்கள் 6 விழுக்காடு அதிகரித்துள்ளன. இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 30,450 பேர் கொலை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசம்தான் இந்தியாவில் நடக்கும் குற்றங்களில் அதிக பங்கை வைத்துள்ளது. பின்வரும் குற்றங்களில் முதன்மை இடம் உத்தரப்பிரதேசத்துக்குத்தான்.

 

1. இந்தியாவில் சைபர் க்ரைம் குற்றங்கள் அதிக அளவில் நடைபெறும் மாநிலம் - 2,639 வழக்குகள்

2. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் அதிகம் உள்ள மாநிலம் - 4,954 வழக்குகள்

3. குழந்தைகள் அதிக அளவில் கடத்தப்படும் மாநிலம் - 9,657 வழக்குகள்

4. பெண்கள், கணவன் மற்றும் உறவினர்களால் பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்களில் 3-வது இடம் - 11,156 வழக்குகள்

5. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இந்திய அளவில் 2-வது இடம் - 4,816 வழக்குகள்

6. இந்தியாவில் அதிக அளவில் பெண்கள் கடத்தப்படும் மாநிலம் - 12,994 வழக்குகள்

7. பொதுவெளியில் பெண்கள் பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்களில் 2-வது இடம் - 11,335 வழக்குகள்

இப்படிப் பல குற்றங்களில் முதல் மூன்று இடங்களுக்குள் உத்தரப்பிரதேசம் உள்ளது. அதேபோல், இந்தியாவில் அதிக மதக்கலவரங்கள் உத்தரப்பிரதேசத்தில் நடைபெறுகின்றன. நடப்பு ஆண்டில் மட்டும் மதக்கலவரங்கள் சிறியதும், பெரியதுமாய் 60 சம்பவங்கள் உ.பி-ல் நடைபெற்றுள்ளன. இதில், 16 பேர் இறந்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில்தான் சில மாதங்களுக்கு முன்பு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் மருத்துவமனையில் இறந்தன. இந்தியாவில் நிறைய ஆழ்துளைக் கிணறு மரணங்கள் நடக்கும் மாநிலங்களிலும் உத்தரப்பிரதேசமே முதலிடம் வகிக்கிறது.

இத்தனையும் சகித்துக் கொண்டு மக்கள் பாஜகவிற்கு விரும்பி உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்தார்களா? சுhத்தியமேயில்லை.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாஜகவினர் முறைகேடாக பயன்படுத்தி தேர்தலில் வென்று வருகின்றனர் என்பது நீண்டகால குற்றச்சாட்டு.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி போன்றவர்கள் பழைய வாக்குச் சீட்டு முறையையே தொடர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மின்னணு வாக்குப் பதிவுதான் வேண்டும் என ஒற்றைக்காலில் பாஜக அடம்பிடித்து வருகிறது. பாஜகவின் இந்த அடம் பிடித்தல் குறித்து தொடர்ந்து சந்தேகம் கிளப்பப்பட்டு வருகிறது.

தற்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பாஜக முறைகேடாக பயன்படுத்தி வெற்றி பெறுவதை உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அம்பலப்படுத்திவிட்டன. உத்தரப்பிரதேசத்தில் மின்னணு வாக்குப் பதிவு மூலம் நடைபெற்ற இடங்களில் பாஜக 87விழுக்காடு வெற்றியைப் பெற்றிருக்கிறது.

ஆனால் வாக்குச் சீட்டு மூலம் வாக்குப் பதிவு நடைபெற்ற இடங்களிலோ பாஜக படுதோல்வியையும் பெரும்பாலான இடங்களில் சுயேட்சைகளும் வென்றிருக்கின்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,625

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.