Show all

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: 3 ஆம் நாள் முடிவில் இலங்கை 9 விக்கெட்டுக்கு 356 ரன்கள்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ள நிலையில் கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 243 ரன்களும், முரளி விஜய் 155 ரன்களும் குவித்தனர். 

அதன் பிறகு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. மேத்யூஸ் 57 ரன்னுடனும், சண்டிமல் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.  மூன்றாம் நாளான இன்று இருவரும் ஆட்டத்தை தொடர்ந்து ஆடினார். சிறப்பாக விளையாடிய மேத்யூஸ் 111 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.பின்னர் வந்தவர்களில் சமரவிக்ரமா(33 ரன்கள்) தவிர அனைவரும் சொற்ப ரன்களில் அட்டமிழந்ததால் இலங்கை அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் மட்டுமே குவிதத்து. ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் சண்டிமல் சிறப்பாக விளையாடி இறுதி வரை அட்டமிழக்காமல் இருந்தார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவு நிலவரப்படி  இலங்கை 180 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.