Show all

தமிழ் தெரிஞ்சவங்களா பார்த்துப் போடுங்கப்பா. இல்லாட்டி அவங்க தமிழ் மீனவர்களைப் போட்டுருவாங்க!

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்திய கடலோரக் காவல் படையை வலிமையாக்கும் வகையில், நடுவண் பாதுகாப்புத் துறை சார்பில் 36 ரோந்துக் கப்பல்கள் இந்தியக் கடலோர காவல் படைக்கு வாங்க தீர்மானிக்கப்பட்டது.

எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனத்திடம் இதற்கான அளிப்பாணை வழங்கப் பட்டுள்ளது. இந்நிலையில், எல் அண்ட் டி நிறுவனம் கட்டமைத்து வழங்கியுள்ள சி-435, சி-436 என்ற 2 ரோந்துக் கப்பல்கள் நேற்று இந்திய கடலோரக் காவல் படையில் சேர்க்கப்பட்டது.

இந்தப் படகில் நவீன ரக சென்சார் கருவிகள், வழிகாட்டும் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. நடுக்கடலில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகள், பேரிடர் கால மீட்புப் பணிகள், மனிதாபிமான உதவிகள், கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மீனவர்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளில் இப்படகுகள் ஈடுபடுத்தப்படும். 15 ஆண்டுகள் உழைக்கும் திறன் கொண்ட இந்தப் படகு மிக அதிகபட்சமாக 40 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. காரைக்கால், கிருஷ்ணபட்டினம் கடற்பகுதியில் 24 மணிநேர ரோந்துப் பணியில் இப்படகுகள் ஈடுபடுத்தப்படும்.

இந்தப் படகில் தலா ஒரு அதிகாரி, 2 துணை அதிகாரிகள் மற்றும் 12 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

எல்லாம் சரி. இந்த ஒரு அதிகாரி, 2 துணை அதிகாரிகள் மற்றும் 12 வீரர்கள் எல்லோரையும் தமிழ் தெரிஞ்சவங்களா பார்த்துப் போடுங்கப்பா. இல்லாட்டி அவங்க தமிழ் மீனவர்களைப் போட்டுருவாங்க!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,624

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.