Show all

மாநில அரசின் வரிவிலக்கிலிருந்த மெழுகுவர்த்திக்கு நடுவண் அரசு சரக்கு,சேவைவரியில் விலக்கு தருமா

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: முதல்வர் பழனிசாமிக்கு தமிழ்நாடு மெழுகுவத்தி தயாரிப்பாளர் நல சங்க நிறுவனர் ஏ.வி.கிரி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மெழுகுவத்தி தயாரிக்கும் தொழிலில் பெண்கள், விதவைகள், ஏழைகள், மாற்றுத் திறனாளிகள்தான் 90 விழுக்காட்டினர் ஈடுபடுகின்றனர். எம்ஜிஆர். ஆட்சியில் மெழுகுவத்திக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. குடிசைத் தொழிலான இதற்கு தற்போது 12 விழுக்காடு சரக்கு,சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பெட்ரோலியம் குழுமத்தில் மெழுகு வாங்கும்போது 18 விழுக்காடு சரக்கு,சேவை வரி கட்டுகிறோம்.

விழா, மழை காலங்களில்தான் மெழுகுவத்தி அதிகம் விற்பனையாகும். எனவே மெழுகுவத்திக்கு சரக்கு,சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,624

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.