Show all

நாம் தமிழரை விட நான்கு வாக்குகளாவது சேர்த்து வாங்கியாக வேண்டுமாம் விஷாலுக்கு

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இராதா கிருட்டினன் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஷால் நேற்று அறிவித்து உள்ளார்

நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழர் தொலைக்காட்சி உரிமையாளரும், சீமானின் நெருங்கிய நண்பரான கலைக்கோட்டுதயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்-

நடிகர் சங்க விவகாரத்தில் நீதி கேட்கும் விஷால், ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போது எங்கு போனார் என்றும், ரஜினி அரசியல் குறித்த கருத்துகளைத் தெரிவித்த போது, ரஜினிகாந்த் ஆக இருந்தாலும் சரி, விஷாலாக இருந்தாலும் சரி அரசியலுக்கு வருவது குறித்து கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூடாது என்றும் சீமான் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தயாரிப்பாளர் அசோக்குமார் மரணத்தில் நிதிநிறுவனர் அன்புச்செழியனைக் கைது செய்ய வேண்டும் என்று ஆக்ரோஷமாக பேட்டி கொடுத்தார் விஷால்.

அடுத்த நாளே, இதழியலாளர்களைச் சந்தித்த சீமான், மார்வாடி மற்ற மொழிக்காரர்கள் பணம் கொடுத்தால் அது நதிநிறுவனம் தமிழன் அதையே செய்தால் கந்துவட்டியா? என்று கொந்தளித்தார். மேலும், விஷாலின் கருத்தையும் விமர்சித்தார். இதற்கு எல்லாம் பதிலடி கொடுக்க நினைத்து தான் விஷால், இந்தத் தேர்தலில் போட்டியிடுவதாக அவரது சகாக்கள் தெரிவித்து உள்ளனர். இராதா கிருட்டினன் நகரில் எப்படியும் வெற்றி பெற முடியாது என்று தெரிந்து தான் விஷால் இந்த தேர்தலில் போட்டியிடுவதாகவும், நாம் தமிழரை விட எப்படியாவது அதிக ஓட்டு பெற்று சீமானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதாலேயே இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் தெரிகிறது.

எங்கள் தலைவன் அண்ணன் சீமான் முன்னெடுத்திருப்பது தமிழர்களை மீட்டெடுக்கும் யுகப் புரட்சி. இராதா கிருட்டினன்நகர் தேர்தலில் விஷால் வெற்றால் கூட அது எங்களுக்கான தோல்வி இல்லை. ஒவ்வொரு தேர்விலும் வெற்றி பெற்;றேயாக வேண்டும் என்பதல்ல எங்கள் இயக்கத்தின்; நோக்;கம். கல்லணை கட்டிய கரிகால்;;சோழன் காலத்தை நோக்கி தமிழக வரலாற்றை திருப்புவது தான் எங்கள் நோக்கம் என்று பாய்கிறார்கள் புலியாக சீமான் தம்பிகள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,624

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.