Show all

குடிஅரசுத் தலைவர் கீச்சுப் பக்கத்தில் ஹிந்தி, ஆங்கிலம் போன்று தமிழிலும் பதிவு

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குடிஅரசுத் தலைவர் கீச்சுப் பக்கத்தில் இதுவரை ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பதிவுகள் மட்டுமே பதிவிடப்பட்டு இருந்தன. இந்தநிலையில் குடிஅரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 6  நாட்கள் பயணமாக  மொரிசியஸ், மடகஸ்கர் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

நேற்று மடகஸ்கர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரை, குடிஅரசுத் தலைவர் அதிகாரப்பூர்வ கீச்சுப் பக்கத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, பதிவிடப்பட்டுள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,727.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.