Show all

சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றம்! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் தீர்மானம்

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும்  தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது

தமிழகச் சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டம் தொடங்கியது; வரவு-செலவு பதிகைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடியது.  காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான தமிழக அரசின் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் பதிகை செய்தார்.

உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்புபடி 6 வாரத்திற்குள், மேலாண்மை வாரியத்தை அமைத்து நடைமுறைக்கு கொண்டுவர, நடுவண் அரசை வலியுறுத்தி தீர்மானம்  சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

அப்போது அவர்  காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கடுமையான சட்டப் போராட்டத்தை நடத்தியுள்ளது.கடந்த காலங்களை போலவே நடுவண் அரசு தமிழகத்தின் கோரிக்கைக்கு இதுவரை செவி சாய்க்கவில்லை  காவிரி விவகாரத்தில் நடுவண் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு கோரி நடுவண் அரசுக்கு தொடர் அழுத்தம் தந்தவர் செயலலிதா. 

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியாக எடுத்த நடவடிக்கைகளை பேரவையில் பட்டியலிட்டார் முதலமைச்சர் பழனிசாமி.

சென்னை வந்த தலைமை அமைச்சரிடம் அனைத்து கட்சி தீர்மானத்தை விளக்கி கோரிக்கை வைத்தோம் என கூறினார்.

தீர்மானத்தை நிறைவேற்றி  தருமாறு அனைத்து கட்சி உறுப்பினர்களிடமும் பேரவைத் தலைவர் வேண்டுகோள் வைத்தார். 

பின்னர் எதிர்க்கட்சி தலைவர்  மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :

ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டிருக்கும் நேரமல்ல இது.  உழவர்கள் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளோம். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தும் தீர்மானத்துக்கு திமுக முழு ஆதரவு  உண்டு. காவிரி விவகாரத்தை அரசியல் ஆக்கக்கூடாது என திமுக எண்ணுகிறது. 

அனைத்து கட்சி தலைவர்களை தலைமை அமைச்சர் சந்திக்காதது மக்களாட்சியின் நெருக்காடியான தருணமாகும். காவிரி மேலாண்மை வாரியத்தை நடுவண் அரசு காலம் கடத்தாமல் அமைக்க வேண்டும்.  மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நடுவண் அரசு தமிழக மக்களின் கோபத்திற்கு உள்ளாகும். 

தமிழகத்திற்கு முழுமையான நீரை கர்நாடகம் எந்த ஆண்டும் வழங்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்திற்காக அனைத்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி விலகத் தயார்.  காவிரி விவகாரம் கழிமுக வேளாண்பெருமக்களின் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக உழவர்களின்; பிரச்சனையாக உள்ளது . என கூறினார். தொடர்ந்து   துரைமுருகன் பேசினார். 

பின்னர், முதலமைச்சர் தாக்கல் செய்த  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும்  தீர்மானம் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன்  சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,727.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.