Show all

அச்சம் தவிர், ஆண்மை தவறேல், இளைத்தல் இகழ்ச்சி, பாரதி வரிகளை நெஞ்சில் விதைத்தார் பினராயி! சபரிமலை போராட்டத்திற்கு பதிலடி!

01,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலைக்குள் பெண்களை செல்ல விடாமல் நடக்கும் போராட்டங்கள் அனைத்திற்கும் பாஜகவே மூலமுதல் காரணம் என்பதை முழுமையாகப் புரிந்து கொண்ட நிலையில், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அச்சம் தவிர்த்து, களத்தில் இறங்கி அரசியல் எதிரிகளை புறமுதுகிட்டு ஓடச் செய்ய கருத்துப் பரப்புதலை  தொடங்க இருக்கிறார். 

புகழ்பெற்ற கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. அங்கு பெண்கள் நுழைவிற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் இப்போது வரை அங்கு பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் அங்கு பதட்டமான சூழ்நிலைதான் நிலவிவருகிறது. 

மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கொஞ்சம் கூட மக்கள் தளத்தில் இருந்து எதிர்ப்பே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த இரண்டு கிழமையாக நடந்த இந்தப் போராட்டம், முழுக்க முழுக்க அரசியல் எதிரிகளின் திட்டமிட்ட சதிவேலைகளே என்பதை பினராயி விஜயன் தெளிவாகக் கண்டுகொண்ட நிலையில், உறுதியாக, என்ன நடந்தாலும் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்போம் என்று முடிவெடுத்துவிட்டார். மேலும் எத்தனை முறை கோரிக்கை வைத்தாலும் கண்டிப்பாக மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் முடிவிற்கு வந்துவிட்டார். 

இந்த நிலையில்தான் நேற்று பெரிய அளவில் போராட்டமும், கலவரமும் சபரிமலையை சுற்றிய பகுதிகளில் நடந்தது. மிகப்பெரிய கலவரமாக மாற இருந்த போராட்டத்தை பினராயி விஜயன் சாமர்த்தியமாக கையாண்டார். தூத்துக்குடி போராட்டம் போல தவறான ஆணைகளை அங்கு வட்டாச்சியர் வழங்கவில்லை. அதே சமயம் போராட்டக்காரர்களை தேவைப்படும் சமயங்களில், தடிஅடி கொடுத்து அடக்கியும் வைத்தார்கள். பெரிய கலவரமாக மாற வேண்டியதை ஒருவழியாக சமாளித்தனர். 

இந்த நிலையில், இந்த போராட்டம் கலவரம் எல்லாவற்றிற்கும் பதில் அளிக்க முடிவெடுத்துள்ளார் பினராயி விஜயன். இந்த மாத இறுதியில் இடதுசாரி அமைப்புகள் கேரளா முழுக்க சபரிமலை கோவில் தீர்ப்பு குறித்தும் பெண்கள் உரிமை குறித்தும் பிரச்சாரம் செய்ய உள்ளது. இதில் முன்னின்று நடத்த போவதே முதல்வர் பினராயிதான். கேரளா முழுக்க, மாவட்டம் மாவட்டமாக சென்று இந்த தீர்ப்பு குறித்து மக்களிடம் பேச இருக்கிறார்கள். இது மேற்கண்ட பிரச்சனைகளுக்கு பதிலாக இருக்கும் என்று அம்மாநில அரசு எதிர்பார்க்கிறது.

வாகை சூட வாழ்த்துகிறோம் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்களே! தமிழகத் திராவிடக் கட்சிகள் விட்ட இடத்தில் இருந்து பொறுப்பை தொடர்ந்திருக்கின்றீர்கள். தமிழகம் போலவே, நோட்டாவுக்கு பிந்தைய இடத்திற்கு தள்ளுங்கள் தேசியக் கட்சிகளை. குறிப்பாக மதவாத பாஜகவை.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,944.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.