Show all

"தடை செய்யப்பட்ட பாகுபாட்டை" பின்பற்றுவதுபோல உள்ளது. உயர் வகுப்பினருக்கான பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு! அறங்கூற்றுவர் ரவிந்திரபட்

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு வழக்கில்- பெரும்பான்மை தீர்ப்போடு ஒத்துப் போகாத அறங்கூற்றுவர் ரவிந்திர பட், இந்தத் திருத்தம் அரசமைப்பு அடிப்படையாக 'தடை செய்யப்பட்ட பாகுபாட்டை' பின்பற்றுவதுபோல உள்ளது. சமத்துவத்தின் உயிரை இது தாக்குவதாக உள்ளது. இட ஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட 50 வரம்பை மீறுவது, மேலும் பல சிக்கலுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

21,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்த வழக்கில்- ஐந்து அறங்கூற்றுவர்கள் கொண்ட அமர்வில் மூன்று அறங்கூற்றுவர்கள் பொருளாதார அடிப்படையான இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவும், (அறுபது மதிப்பெண்) இரண்டு அறங்கூற்றுவர்கள் (நாற்பது மதிப்பெண்) எதிராகவும் தீர்ப்பளித்துள்ளனர்.

உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் உதய் உமேஷ் லலித் மற்றும் அறங்கூற்றுவர் தினேஷ் மகேஷ்வரி தலைமையிலான ஐந்து அறங்கூற்றுவர்கள் கொண்ட அமர்வில்- பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என ஐந்தில் மூவர் என்கிற பெரும்பான்மையர் தீர்ப்பளித்துள்ள நிலையில் அதுவே உச்சஅறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்பாக அமைகிறது.

ஆதரவாக தீர்ப்பளித்துள்ள அறங்கூற்றுவர்கள் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு அரசமைப்பின் அடிப்படை அம்சங்களை மீறவில்லை என தெரிவித்துள்ளனர்.

இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்ப்பளித்த மூன்று அறங்கூற்றுவர்கள்: தினேஷ் மகேஷ்வரி, பெலா எம். திரிவேதி மற்றும் ஜே பி பர்டிவாலா.

இந்தியாவின் தலைமை அறங்கூற்றுவர் உதய் உமேஷ் லலித் மற்றும் எஸ். ரவிந்திர பட் ஆகியோர் இந்த தீர்ப்போடு ஒத்துப் போகவில்லை.

அறங்கூற்றுவர் தினேஷ் மகேஷ்வரி, பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான 103வது அரசமைப்பு திருத்தம் செல்லுபடியாகும் என்றும் அது அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்றும் கூறியுள்ளார்.

இட ஒதுக்கீடு என்பது சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட எந்தவொரு பிரிவினருக்குமான உறுதியான நடவடிக்கை. எனவே, பொருளாதார அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு என்பது அரசமைப்பை மீறாது.

பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களை பொருளாதார அடிப்படையாக பின்தங்கி இருப்பவர்களுக்கான இட ஒதுக்கீடுகளில் இருந்து விலக்குவது அரசமைப்பு அடிப்படையாகச் செல்லுபடியாகும். கிடைக்கக்கூடிய அனைத்து இடங்களிலும் 50விழுக்காடு கூடுதலாக பொருளாதார அடிப்படையாக பின்தங்கியுள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது அரசமைப்புப்படி செல்லுபடியாகும். ஏனெனில் உச்சவரம்பு என்பது நெகிழ்வானது, அது சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு மட்டுமே பொருந்தும், என்று அறங்கூற்றுவர் தினேஷ் மகேஷ்வரி கூறியுள்ளார்.

அறங்கூற்றுவர்கள் மகேஷ்வரியின் தீர்ப்புடன் ஒத்துப் போன நீதிபதி பெலா திரிவேதி, பொருளாதார அடிப்படையான இட ஒதுக்கீடு இந்திய அரசமைப்பின் கட்டாயமான அம்சமாகும் என்று தெரிவித்துள்ளார்.

சட்டம் மக்களின் தேவைகள் குறித்து புரிந்து கொள்கிறது. அதேபோல பொருளாதார அடிப்படையில் சிலரை ஒதுக்கி வைத்திருப்பது குறித்து தெரிந்துள்ளது. இந்தியாவில் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவினருக்கு சம வாய்ப்பை வழங்க பழமையான சாதி அமைப்புதான் இட ஒதுக்கீட்டிற்கு வித்திட்டது என்று சொல்ல முடியாது. இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு அரசமைப்பை மாற்றியமைக்க வழிவகுக்கும் வகையில் இட ஒதுக்கீடுகள் குறித்த மாற்றுப் பார்வை தேவை தெரிவித்துள்ளார்.

அறங்;கூற்றுவர் பர்டிவாலா, ஒட ஒதுக்கீடு ஒரு இறுதியான முடிவல்ல, ஆனால் சமூக பொருளாதார நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை தீர்ப்போடு ஒத்துப் போகாத அறங்கூற்றுவர் ரவிந்திர பட், இந்தத் திருத்தம் அரசமைப்பு அடிப்படையாக 'தடை செய்யப்பட்ட பாகுபாட்டை' பின்பற்றுவதுபோல உள்ளது. சமத்துவத்தின் உயிரை இது தாக்குவதாக உள்ளது. இட ஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட 50 வரம்பை மீறுவது, மேலும் பல சிக்கலுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,425

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.