Show all

ஆளுநர் எதிர்ப்பு! தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில், துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமுன்வரைவுக்கு

ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில், துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமுன்வரைவுகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைசெயலாளருக்கு ஆளுநர் சில விளக்கங்களைக் கோரி மடல் எழுதியுள்ளார்.

04,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில், கடந்த மாதம், சட்டப்பேரவையில் இரண்டு சட்டமுன்வரைவுகள் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

அந்தச் சட்டமுன்வரைவுகளில், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலும், தேவைப்பட்டால் துணைவேந்தரை நீக்கம் செய்யும் இறுதி முடிவை மாநில அரசே மேற்கொள்ளும் வகையிலும் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. 

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசை ஆளுநர் கலந்தாலோசிப்பதில்லை என்பதால் இந்தச் சட்ட முன்வரைவுகள் கொண்டுவரப்பட்டதாக விளக்கமளித்தார். 

இந்நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த அந்த சட்டமுன்வரைவுகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைசெயலாளருக்கு ஆளுநர் சில விளக்கங்களை கோரி மடல் எழுதியுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,346.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.