Show all

போயே போச்சு!

இராஜஸ்தான் மாநிலம் கரௌலியில் உள்ள இந்திய மாநில வங்கிக் கிளையிலிருந்து ரூ.11 கோடி மதிப்பிலான நாணயங்கள் காணாமல் போனது தெரியவந்திருக்கிறது.

03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இராஜஸ்தான் மாநிலம் கரௌலியில் உள்ள இந்திய மாநில வங்கி (எஸ்பிஐ) கிளையில், பாதுகாப்பு பெட்டகங்களிலிருந்து ரூ.11 கோடி மதிப்பிலான நாணயங்கள் காணாமல் போன பாடுகள் தொடர்பாக ஒன்றியக் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

முன்னதாக கடந்த ஆண்டு இதே மாதம், வங்கியின் தொகை கையிருப்பில் முரண்பாடுகள் இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, வங்கி கிளையின் பணத்தை எண்ணுவது என முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.

பின்னர் பணத்தை எண்ணும் பணி தனியாருக்கு வழங்கப்பட்டு  கணக்கிட்டதில், வங்கிக் கிளையிலிருந்து ரூ.11 கோடி மதிப்பிலான நாணயங்கள் காணாமல் போனது தெரியவந்திருக்கிறது. இதில், ரூ.2 கோடி மதிப்பிலான நாணயங்கள் மட்டுமே இந்தியக் கட்டுப்பாட்டு வங்கிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

அந்த வரிசையில், டெல்லி, ஜெய்ப்பூர், தௌசா, கரௌலி, சவாய் மாதோபூர், அல்வார், உதய்பூர், பில்வாரா போன்ற நகரங்களில் சுமார் 15 வங்கி முன்னாள் அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் பிற இடங்கள் என மொத்தம் 25 இடங்களில் ஒன்றயக் குற்றப்புலனாய்வுத்துiறை சோதனை மேற்கொண்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,345.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.