Show all

பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே நவம்பர்13 இந்தியா வருகை

கோவாவில் நடத்தப்படும் இந்தியாவின் சிந்தனைகள் கூட்டம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பூடான் பிரதமர்  ஷேரிங் டோப்கே நவம்பர்13 இந்தியா வருகிறார்.

கோவாவில் உள்ள இந்திய அறக்கட்டளை சார்பில் நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் இந்தியாவின் சிந்தனைகள் கூட்டம் என்ற நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்துகொள்கிறார். கூட்டத்தில் ஷேரிங் டோப்கே, நாகரீக நாடுகளிடம் இருந்து கற்றல் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

பின்னர் அவர், நடுவண் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கார், கோவா ஆளுநர் மிரிதுல் சின்கா, மற்றும் கோவா முதல்வர் லக்ஷ்மிகாந்த் பர்சேகர் ஆகியோரையும் சந்தித்து பேசுகிறார்.

பின்னர் நவம்பர் 16 ஆம் தேதி புதுடெல்லி வரும் டோப்கே இந்திய அரசின் மூத்த அதிகாரிகளுடனான சந்திப்புக்கு பின்னர் நவம்பர் 17 ஆம் தேதி பூடான் திரும்புகிறார் என பூடான் வெளியுறவுதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.