Show all

அடுத்து, இந்தியாவின் சிறுகுறு நிறுவனங்களை முழுமையாக ஒழித்துக் கட்டும் காசோலை ஒழிப்பு

05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடியின் வணிகக் கூட்டாளிகளுக்கு இந்தியா! இந்தியாவுக்காக உள்நாட்டு மக்களின் சிறுகுறு நிறுவனங்கள்! மக்களின் சிறுகுறு நிறுவனங்களுக்கு சட்டம் விதிமுறைகள் என்கிற ஆப்பு மட்டும். என்பதே மோடி ஆட்சியின் தாரக மந்திரம் என்பதையும் இடையிடையே பாஜக, ஹிந்துத்துவா என்பன கூட சும்மா பூசு மொழுகல்களே என்பதை அவரின் இந்த மூன்றாண்டு ஆட்சியில் நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

அந்த வகைக்காகவே மோடியின் எல்லா திட்டங்களும் முன்னெடுக்கப் பட்டன என்பது நடுநிலையாளர்களக்கு மட்டுமே நன்றாகப் புரியும். அந்த வகைக்காகவே எண்ணிம முறையிலான பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக வங்கி காசோலைகளை முற்றிலுமாக ஒழிக்க மோடி அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிரவீண் கந்தேல்வால் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

மோடி கடந்த ஆண்டு காகித பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். நடுவண் அரசின் இந்த திடீர் அறிவிப்பால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதோடு லட்சக்கணக்கான பணப்பரிவர்த்தனையில் நாட்டு மக்கள் சிக்கித் தவித்தனர். இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல அடுத்த அதிரடியான திட்டத்தை மோடி அரசு அறிவிக்க உள்ளதாக அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் செயலாளர் பிரவீண் கந்தேல்வால் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் வங்கிகளில் பணப்பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் காசோலைகளுக்கு நடுவண் அரசு முழுவதும் நிறுத்தக் கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எண்ணிம முறைக்கு மாற்ற கடன் மற்றும் ஆதாய அட்டைகள் மூலம் எண்ணிம பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற எண்ணிம ரத் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இதனை தெரிவித்தார்.

ரூபாய் தாள்களை அச்சடிப்பதற்காக ரூ. 25 ஆயிரம் கோடி செலவு செய்கிறது அரசு. இதில் ரூ. 6 ஆயிரம் கோடியானது பாதுகாப்பு அம்சங்களுக்காக செலவிடப்படுகிறது.

ஆனால் வங்கிகள் ஆதாய அட்டைகளை பயன்படுத்தி செய்யும் பரிவர்த்தணைக்கு ஒரு விழுக்காடும், கடன் அட்டைகளைப் பயன்படுத்தி செய்யும் பரிவர்த்தணைக்கு 2 விழுக்காடும் மக்களே அழுது கொள்வார்கள். அதனாலேயே மோடி அரசு இந்த பரிவர்த்தணையை ஊக்குவிக்கும் வகையாக மற்றொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கை.

தற்போதைய நிலவரப்படி 95 விழுக்காட்டு வர்த்தக நடவடிக்கைகள் ரூபாய் தாள்கள் அல்லது காசோலைகள் மூலமாகவே நடைபெற்று வருகின்றன. எனவே காசோலைகளுக்கும் மூடுவிழா கண்டால் மற்றொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கையாகவே இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பணமதிப்பிழப்பிற்குப் பின்னர் மின்னணுப் பரிமாற்றத்தின் எண்ணிக்கை, தற்போது 87 கோடி என்ற அளவில் நிலைபெற்றிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணமதிப்பிழப்பிற்குப் பிறகும் எண்ணிம முறையிலான பணப்பரிவர்த்தனைகள் பெருமளவில் வளர்ச்சியடையவில்லை. எனினும் முன்பு இருந்த நிலைமையை விட சற்று உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,613

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.