Show all

நூறு கோடி ரூபாய்க்கு ரூ100தாள்களை நேபாள நாட்டிற்கு வழங்க இந்தியா ரிசர்வ் வங்கி முடிவு

பழைய ரூ500 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற இந்திய அரசு அறிவித்தன் எதிரொலியாக நேபாளத்தில் கடும் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில்லரை தட்டுப்பாட்டைச் சமாளிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேபாள அரசு கேட்டுக்கொண்டது. நேபாள நாட்டிற்கு ரூ.100 கோடி மதிப்புள்ள ரூ.100 ரூபாய்தாள்களை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

     கருப்பு பணத்தை ஒழிக்கும் நம்பிக்கையில் ரூ.500, ரூ.1,000 ரூபாய்தாள்களை செல்லாது என கடந்த மாதம் 8ம் நாள் நடுவண் அரசு அறிவித்தது.  பிரதமரின் இந்த திடீர் அறிவிப்பால் மக்கள் தங்கள் அன்றாட செலவுகளுக்கும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் ரூ.500 மற்றும் ரூ.1,000 ரூபாய்தாள்களை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் பழைய ரூபாய் தாள்களை பொதுமக்கள் டிசம்பர் 30ம் நாள் வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ள விதிவிலக்கு அளிக்கப்பட்டது. அதன் பிறகு ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

     இந்நிலையில், நேபாள நாட்டிலும் புதிய ரூ.2000 ரூபாய்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. நேபாளத்தில் இந்திய ரூபாய் தாள்கள் புழக்கத்தில் உள்ளதால் இதனால் சில்லரை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. பணப்புழக்கம் இல்லாததால் வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

     நேபாளத்தில் சில்லரை தட்டுப்பாட்டை போக்க அதிகளவில் ரூ.100 ரூபாய்தாள்கள் வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியாவிடம் நேபாள அரசு கோரிக்கை வைத்தது. இதனை ஏற்றுக்கொண்ட இந்திய ரிசர்வ் வங்கி ரூ.100 கோடி மதிப்புள்ள ரூ.100 ரூபாய்தாள்களை இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று நேபாள அரசிடம் தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.