Show all

தமிழக மக்கள் புலம்பித் தவிக்கப் போகிறார்களா என்ன?

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, நாடு முழுவதும் 95 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து காஷ்மீரில் இருந்து தனது முதல் பயணத்தைத் தொடங்கினார்.

     2019 மக்களவைத் தேர்தலைக் குறிவைத்து இந்தப் பயணம் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதனிடையே, அமித் ஷா மே 10-ம் தேதி சென்னை வர இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து 12-ம் தேதி கோவையில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருப்பதாகவும்  பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து இருந்தார்.

     இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் சென்னை பயணம் திடீர் ஒத்திவைக்கப்பட்டுள்ளாதாக தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

     அடாடா தமிழகத்தின் விடிவௌ;ளியின் பயணம் தடைபட்டு விட்டதேயென்று தமிழக மக்கள் புலம்பித் தவிக்கப் போகிறார்களா என்ன?

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.