Show all

பதினாறு விழுக்காடு பங்குகள் வாங்கி, அமெரிக்க நிறுவனத்தில் முதலீடு செய்யும் முகேஷ் அம்பானி

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-இன் நுகர்வோர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகக் கிளையான ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் அமெரிக்காவின் காய்ஓய்எஸ் டெக்னாலஜிஸ் இன்க் நிறுவனத்தில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்துள்ளது. 

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சூப்பர் திட்டமான ஜியோ போனுக்கான மென்பொருள் தயாரிப்பது அமெரிக்காவின் காய்ஓஎஸ் நிறுவனம் தான், இந்த இந்நிறுவனத்தில் தான் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 16 விழுக்காடு பங்குகளைக் கைப்பற்றியுள்ளது. ஜியோபோன் என்பது இந்தியாவின் முதல் 4ஜி பியூச்சர் போன், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகத்தை ரிலையன்ஸ் கைப்பற்றும் முயற்சியாக இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் அதிக லாபம் பெறும் முயற்சியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அமெரிக்க நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.   

இந்த 16 விழுக்காடு பங்குகளைக் கைப்பற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 7 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது. 

மும்பை பங்குச்சந்தைக்கு ரிலையன்ஸ் குழுமம் கொடுத்த அறிக்கையில், ரிலையன்ஸ் ரீடைல் சுமார் 19,04,781 பங்குகளை 3.675 டாலர் தொகைக்குக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாகவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எண்ணிமச் சேவையில் அதிகளவிலான முதலீட்டைச் செய்து வருகிறது. இதன் மூலம் மென்பொருள் துறையிலும் நுழையத் திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது.

ஒரு பழைய செய்தி: “மோடி நடவடிக்கை! முகேஷ் அம்பானி குடும்பம் நடுத்தெருவுக்கு வருவது நிச்சயம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, அனுமதியில்லாமல்  நரேந்திர மோடியின் படத்தை அவர்களின் விளம்பரத்தில் பயன்படுத்திவிட்டார்களாம்

கொதித்து எழுந்த நடுவண் அரசு!

அந்த நிறுவனத்தின் மீது கடும் அபராதத் தொகையை விதித்திருக்கிறது.

இதனால் முகேஷ் அம்பானி குடும்பமே நடுத்தெருவுக்கு வருவது நிச்சயம்!

அபராதத் தொகை எவ்வளவு தெரியுமா?

500 ரூபாய்!”

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,722. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.