Show all

சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழே என்பதை கீழடி ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ்தான் என்பதற்கு பல சான்றுகள் முன்னமே இருந்த போதும், கீழடி ஆய்வில் அது வலுவாக உறுதி படுத்தப் பட்டு இருக்கிறது. 

தமிழகத்தில் ஆதிச்சநல்லூருக்கு அடுத்தபடியாக கீழடியில்தான் அதிக பெரிய அளவில் அகழாய்வு நடந்து கொண்டு இருக்கிறது. நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கீழடி ஆய்வு மீண்டும் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கீழடியில் கிடைத்து இருக்கும் தமிழ் எழுத்துக்கள் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. 

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கீழடி அகழாய்வு முடிவுகளின் படி கீழடியில் கிடைத்த பொருட்கள் மிகவும் பழமையானவை. அங்கு கிடைத்த வீட்டு உபயோக பொருட்கள் எல்லாம் 2200 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. 

இதுதான் மிகவும் பழமையான நாகரீகம் என்றும் கூறப்பட்டது. இதில் காணப்பட்டது அனைத்தும் தமிழ் எழுத்துக்கள் ஆகும். இதில் பழைய தமிழ் எழுத்து முறைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபித்துள்ளார்கள். 

சங்க காலத் தமிழ் ஓலைச்சுவடிகளை போலவே இந்த எழுத்துக்கள் இருக்கின்றன. இந்த மாதிரியான எழுத்துக்கள் சிந்து சமவெளி ஆய்விலும் கிடைத்து இருக்கிறது. அங்கு பயன்படுத்தப்பட்ட சொற்களும் தமிழ் சொற்களேயாகும். 

இதனால் சிந்து சமவெளியில் பயன்படுத்தப்பட்ட மொழி தமிழ் மொழிதான் என்று உறுதிப் படுத்தப் பட்டிருக்கிறது. 

இதுகுறித்து இன்னும் ஆராய்ச்சிகள் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்னும் கீழடியில் நடத்தப்படும் ஆய்வுகள் மூலம் மேலும் பல தலையாய வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தும் என்று சங்க கால குறியீட்டு ஆராய்ச்சியாளர் சுபாஷ் சந்திர போஸ் தெரிவித்து இருக்கிறார்.

உலகின் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் தமிழுக்கு இருக்கை அமையும் போது, உலகம் தமிழன் முதல் மாந்தன் என்றும், தமிழே உலகின் மூத்த முதல் மொழி என்றும் நிறுவும். தமிழராகிய நாம்; செய்ய வேண்டியது உலகினருக்கு நமது தமிழை அறிமுகப் படுத்தி வைக்க அனைத்து வழிகளிலும் ஆவன செய்வதுதான். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,722. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.