Show all

மலேசியாவில் ராகுல் பெருமிதம்! எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்லக்கொள்ளி! பாஜகவும், காங்கிரசும்

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மலேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம், ‘நீங்கள் பிரதமராக இருந்திருந்தால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எப்படி அமல்படுத்தியிருப்பீர்கள்’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

கறுப்புப் பண ஒழிப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எனக் கூறி, கடந்த 22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5118ல் (08.11.2016) புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக மோடி அரசு அறிவித்தது. நடுவண் அரசின் இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முதலாமாண்டு நாளை, கறுப்பு நாளாக காங்கிரஸ் கட்சி அனுசரித்தது. 

இந்த நிலையில், மலேசியாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுலிடம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நீங்கள் எப்படி அமல்படுத்தியிருப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு புன்னகையுடன் பதிலளித்த ராகுல், ஒருவேளை நான் தலைமை அமைச்சராக இருந்திருந்தால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைகுறித்த அறிக்கையோ அல்லது ஆவணமோ என்னிடம் கொடுக்கப்பட்டிருந்தால், அதை நான் குப்பைத்தொட்டியில் வீசியெறிந்திருப்பேன்’’ என்று கூறினார். 

இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? 

காங்கிரஸ் ஆட்சியில்;, கட்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப் பட்டதும், ஈழத்தமிழர்களின் கனவு முற்றிலுமாக தகர்க்கப் பட்டதும், பல்லாயிரம் ஈழத்தமிழர்கள் கொல்லப் பட இலங்கைக்கு ஆயுதங்களும் பயிற்சியும் வழங்கியதும் மறக்க முடியாதது என்றால், பாஜகவின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது என்கிற நிலையில், எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்லக் கொள்ளி என்று எப்படி சொல்லுவது!

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,722. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.