Show all

மோடி வருகிறார்! பயணத்தில் மாற்றம் இல்லை; பயணத்திட்டம் மாறியுள்ளது; சாலைப்பயணம், உலங்கு வானுர்தி பயணமாக

29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நேற்றே தொடங்கி விட்டது இராணுவக் கண்காட்சி. இந்த கண்காட்சி 4 நாட்கள் நடைபெறுகிறது. ராணுவ கண்காட்சி நேற்றே தொடங்கினாலும், அதன் தொடக்க விழா மோடி கலந்து கொள்வதால்;;;;;, இன்று நடைபெறுகிறது. 

மேலும் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைர விழா கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் மோடி கிண்டி இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் இதழியலாளர்களுக்கு பேட்டி அளிக்க உள்ளதாக சொல்லப் படுகிறது. தமிழகத்தின் கருப்புக் கொடி போராட்டத்தையொட்டி திட்டத்தில் மாறுதல் வருமா தெரிய வில்லை.

மோடி, டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து இன்று காலை 6.40 மணி அளவில் தனி விமானத்தில் புறப்படும் அவர், காலை 9.20 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறார்.

பின்னர் அங்கிருந்து ராணுவ உலங்கு வானூர்தியின் மூலம், காலை 9.50 மணி அளவில் மாமல்லபுரம் போய்ச்சேரும் அவர், அங்குள்ள இறங்குதளத்தில், இருந்து காரில் புறப்பட்டு, பத்து நிமிட தூரம் மட்டும் சொகுந்தில் பயணித்து காலை 10 மணிக்கு கண்காட்சி நடைபெறும் திருவிடந்தை சென்றடைகிறார். அங்கு ராணுவ கண்காட்சியின் தொடக்க விழாவில் பேசுகிறார். இந்த விழா மதியம் 12 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

விழா நிகழ்ச்சி முடிந்தவுடன் மதியம் 12.05 மணிக்கு சொகுந்து மூலம் மாமல்லபுரம் இறங்கு தளத்துக்கு வரும் மோடி, அங்கிருந்து ராணுவ உலங்கு வானூர்தி மூலம் மதியம் 12.40 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தை வந்து அடைகிறார்.

பின்னர் மதியம் 1 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மைய வைர விழா கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அதன்பிறகு சென்னை தொழில்நுட்ப வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் திட்டம் தொடர்ந்தால்  2.05 மணிக்குள் முடித்துக் கொண்டு புறப்பட்டு 2.20 மணிக்கு விமான நிலையம் போய்ச் சேரும் மோடி, அங்கிருந்து 2.25 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி செல்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத நடுவண் அரசை கண்டித்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை தீவிரமாக நடத்தி வரும் நிலையில், மோடி இன்று சென்னை வருகிறார். எனவே அவருக்கு கருப்பு கொடி காட்டப் போவதாக தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளான ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து உள்ளன.

மேலும் நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தலைமையிலான தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை, மணியரசன் தலைமையிலான காவிரி உரிமை மீட்புக்குழு உள்ளிட்ட அமைப்புகளும் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவருக்கு கருப்பு கொடி காட்ட முடிவு செய்து உள்ளன.

எனவே மோடியின் வருகையையொட்டி, சென்னை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. 8 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விமானநிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

டெல்லியில் இருந்து தேசிய பாதுகாப்புப்படை தலைவர் சர்மா தலைமையில் 60 பேர் அடங்கிய குழுவினர் நேற்று காலை சென்னை வந்தனர். அவர்கள் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம், திருவிடந்தை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு மோடிக்கான பாதுகாப்பை உறுதி செய்தனர்.

மோடி டெல்லியில் பயணத்தைத் தொடங்கி விட்டார். சென்னை ஒரே பரபரப்பில் வான்நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறது. வானமே மோடிக்கு நான் கருப்பு கொடி காட்டுகிறேன் என்று கட்டங்கரேர் என்று காட்சி அளிக்கிறது. அங்குமிங்கும் ஒடிக்கொண்டிருக்கும் காணெளிக் கருவி ஊடகங்களின் வெளிச்சம் வானக் கருப்பை கிழித்துக் கொண்டிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,755.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.