Show all

தமிழகத்தில் இறங்கினார் மோடி. பறக்கவிடப் பட்டன ஆயிரக் கணக்கான கருப்பு பலூன்கள்

29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடி, விமான நிலையத்தில் வந்திறங்கிய சமயத்தில், அந்தப் பகுதியைச் சுற்றி கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. 

அவருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நடுவண் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர்  உள்ளிட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மணியரசன், தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் கைது.

இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் உள்ளிட்டவர்கள் விமானநிலைய வளாகத்துக்கு முன் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம், காவல்துறை அதிகாரிகள் சமாதனம் பேசிவருகின்றனர். 

காஞ்சிபுரம், திருவிடைந்தை பகுதியில் நடைபெற்றுவரும் ராணுவக் கண்காட்சியில், பங்கேற்பதற்காக மோடி இன்று தமிழகம் வருகிறார். அவரது வருகையையொட்டி, சென்னை முழுவதும் சுமார் 7 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மோடி வருகையின்போது, கறுப்புக்கொடி காட்டப்படும் என்று தி.மு.க, நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்திருந்தனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பரங்கிமலைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,755.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.